திரைத்துறையில் வெற்றி பெற்ற பின்னரும் புதிய சவால்களை ஏற்று அரசியலுக்குள் நுழைந்த விஜயின் துணிச்சல் தன்னை மிகவும் கவர்ந்துள்ளதாக நடிகை சமந்தா தெரிவித்துள்ளார்
நடிகை சமந்தா, தமிழக முதலமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். இது தொடர்பாக சமூக வலைதளபக்கத்தில் புகைபடத்தையும் பதிவிட்டுள்ளார்.
அதில், திரைத்துறையில் வெற்றி பெற்ற பின்னரும் புதிய சவால்களை ஏற்று அரசியலுக்குள் நுழைந்த விஜயின் துணிச்சல் தன்னை மிகவும் கவர்ந்ததாக தெரிவித்துள்ளார்.
மேலும், விஜய் வெறும் திரைநாயகன் மட்டுமல்ல, சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் செயல்படுபவர் என்றும் பாராட்டினார்.
அவரது அரசியல் பயணத்திற்கு வலிமை, ஞானம் மற்றும் துணிச்சல் கிடைக்க வாழ்த்திய சமந்தா, இளைஞர்கள் தங்களது கனவுகளைத் தாண்டி பெரிய இலக்குகளை நோக்கிச் செல்ல வேண்டும் என்றும் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.


