
தமிழகத்தில் இன்று ஓரிரு மாவட்டங்களில் இடி மின்னல் மற்றும் பலத்தக் காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வட தமிழக பகுதிகளிலிருந்து லட்சத்தீவு பகுதிகள் வரை 3.1 கிலோ மீட்டர் உயரத்தில் ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது. இதன்காரணமாக தமிழகத்தில் இன்று ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
இதன்படி, கோயம்புத்தூர், தேனி, நீலகிரி, திண்டுக்கல், மதுரை, திருச்சிராப்பள்ளி, ஈரோடு, நாமக்கல், கரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்தக் காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் எனத் தெரிவித்துள்ளது.




