
தமிழக வெற்றி கழகம் ஆட்சிக்கு வந்தால் எல்லோருக்கும் வீடு… வீட்டுக்கு வீடு மோட்டார் சைக்கிள்.. முடிந்தால் காரும் வாங்கித் தருவோம் எல்லாருக்கும் வருமானம் வரும் வழியை ஏற்படுத்தி தருவோம் எனக் காஞ்சிபுரத்தில் நடந்த கூட்டத்தில் நடிகர் விஜய் பேசியிருக்கிறார். கரூர் துயர சம்பவத்திற்கு பிறகு ஒரு வழியாக காஞ்சிபுரத்தில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் மக்களை சந்தித்தார்.
இந்தக் கூட்டத்தில் அவர் பேசும் பொழுது வருகிற 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக்கழகம் வெளியிடக்கூடிய தேர்தல் அறிக்கை தொடர்பாகவும் சில தகவல்களை பேசினார். தமிழக வெற்றி கழகத்தின் தேர்தல் அறிக்கை தயாராகிக் கொண்டிருக்கிறது . அதன் முழுமையான விவரங்கள் உங்களுக்கு வெளியிடப்படும் தற்போது ஒரு சில தகவல்களை உங்களுக்கு தெரிவிக்கிறேன் என்று சொல்லிய நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் நிச்சயமாக ஆட்சிக்கு வரப்போகிறது .
நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் எல்லோருக்கும் வீடு கட்டி தருவோம் ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு மோட்டார் சைக்கிள் வாங்கித் தருவோம். வீட்டுக்கு வீடு கார் வாங்கித் தரும் அளவுக்கு பொருளாதாரத்தை வளர்த்துக் காட்டுவோம் . எல்லோருக்கும் வருமானம் வரும் வகையில் ஏற்பாடுகள் செய்வோம் வெள்ள பாதிப்பு ஏற்பட்டால் திமுக ஆட்சி போல் நாங்கள் பணத்தை சுருட்ட மாட்டோம் முழுமையான அளவு வெள்ள பாதுகாப்பு ஏற்படுத்தி தரப்படும் என்றெல்லாம் பேசினார்.
தேர்தல் வாக்குறுதிகள் என்பது வாக்குகளை பெற்று ஆட்சியைப் பிடிப்பதற்காக மட்டுமே தமிழகத்தில் அரசியல் கட்சிகள் நீண்ட காலமாக பயன்படுத்தி வருகின்றன. ஏற்கனவே கடந்த தேர்தலில் அனைத்து பெண்களுக்கும் மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் பெண்கள் இலவசமாக பேருந்துளில் பயணம் செய்யலாம். அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை திரும்பவும் பெற்றுத் தருவோம் என்றெல்லாம் வாக்குறுதி கொடுத்து திமுகவினர்ஆட்சியைப் பிடித்தார்கள்.
ஆனால் நடைமுறையில் அது சாத்தியப்படவில்லை காரணம் தமிழக அரசிடம் போதுமான நிதி கிடையாது. கடுமையான கடன் சுமையில் தான் தமிழக அரசு இயங்கிக் கொண்டிருக்கிறது . இதன் அடிப்படையில் தான் சில சட்ட திட்டங்களை வகுத்து குறிப்பிட்ட பெண்களுக்கு மட்டும் ஆயிரம் ரூபாய் வழங்கினார்கள். குறிப்பிட்ட சில பேருந்துகளில் மட்டும் பெண்களுக்கு இலவச பஸ் வசதி செய்து தந்தார்கள் கிட்டத்தட்ட பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த முடியாத சூழ்நிலை இருக்கிறது.
இப்படிப்பட்ட நிலையில் தான் அரசியல் அனுபவம் எதுவுமே இல்லாத விஜய் தனது மனதிற்கு என்ன தோன்றியதோ அதை எல்லாம் பேசியிருக்கிறார் . அவரை பொறுத்தவரையில் மக்களுக்கு நிறைய நல்லது செய்ய வேண்டும் என்று ஆசைப்படுகிறார். எல்லோருக்கும் வீடு கட்டி தர வேண்டும். மோட்டார் சைக்கிள் தர வேண்டும் கார் வாங்கி தர வேண்டும். எல்லோரும் நன்றாக சம்பாதிக்க வேண்டும் இதெல்லாம் அவரது ஆசைகள் எனவே அந்த ஆசைகளை குறை சொல்ல முடியாது.
ஆனால் நடைமுறையில் இது சாத்தியமா என்றால் 100க்கு 200 சதவீதம் சாத்தியம் இல்லை என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். தற்போதைய சூழ்நிலையில் தமிழக அரசு ஒன்பது லட்சம் கோடி கடன் சுமையில் இருக்கிறது . இந்த கடனுக்காக பல கோடி ரூபாய்கள் மாதாந்திர வட்டியாக கட்டி வருகிறார்கள். டெல்லி பாஜக மேல் இடத்திற்கும் திமுகவிற்கும் மோதல் சூழ்நிலைகள் இருப்பதால் டெல்லியில் இருந்து போதிய நிதி உதவியும் தரப்படுவதில்லை.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் நடிகர் விஜய் போல் மு க ஸ்டாலினுக்கும் எடப்பாடி பழனிச்சாமிக்கும் சீமானுக்கும் ஆசைகள் இருக்கலாம் ஆனால் நடைமுறையில் இதை எப்படி செயல்படுத்த முடியும். அனைவருக்கும் வீடு கட்ட வேண்டும் என்றால் தற்போதைய சூழ்நிலையில்பல லட்சம் ஏக்கர் அளவில் நிலங்கள் தேவைப்படும். ஏற்கனவே ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் நகரப் பகுதிகளையும் தாண்டி கிராம பகுதி வரை இடங்களை வளைத்து போட்டு விட்டார்கள் விட்டார்கள்.
இதற்கு மேல் வீடு கட்ட வேண்டும் என்றால் தமிழ்நாடு முழுவதுமாக இருக்கும் விவசாய நிலங்களைத் தான் அழிக்க வேண்டும் . அப்படி நிலங்களை வாங்குவதற்கு முன்னெடுக்கும் பொழுது எத்தனை விவசாயிகளுக்கு போதிய பணம் கிடைக்கும் .எத்தனை விவசாயிகள் தங்கள் நிலத்தை விற்க முன் வருவார்கள் என்றெல்லாம் ஏராளமான கேள்விகள் இருக்கின்றன.மேலும் கட்டுமான செலவுகள் உச்சத்தை தொட்ட நிலையில் சுமாராக ஒரு வீடு கட்ட வேண்டும் என்றால் பத்து லட்ச ரூபாய் தேவைப்படும்.
தமிழகத்தை பொறுத்தவரையில் வீட்டுக்கு வீடு மோட்டார் சைக்கிள் வாங்க வேண்டும் என்றால் சுமார் ஒன்றரை கோடி மோட்டார் சைக்கிள் வாங்க வேண்டும். ஒரு மோட்டார் சைக்கிள் தற்போது ஒரு லட்ச ரூபாய் அளவில் இருக்கிறது. அந்த வகையில் மோட்டார் சைக்கிள் வாங்க வேண்டும் என்றால் சுமார் 25 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் செலவிட வேண்டும். அதே போல் கார்கள் வாங்க வேண்டும் என்றால் கிட்டத்தட்ட ஒரு லட்சம் கோடி ரூபாய் பணம் வேண்டும்.
தற்போதைய சூழ்நிலையில் ஒவ்வொரு தமிழனின் தலையிலும் 65 ஆயிரம் ரூபாய் கடன் இருக்கிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் விஜய் சொல்வதெல்லாம் சாத்தியம் இல்லை என்கிறார்கள் அரசியல்வாதிகள். அது மட்டுமல்ல இருசக்கர வாகனங்கள் கார்களின் எண்ணிக்கை பெருகும் பொழுது தமிழ்நாட்டில் மிகப்பெரிய போக்குவரத்து நெரிசல் ஏற்படலாம் எனவே தமிழ்நாடு முழுவதும் சாலைகளை அகலப்படுத்த வேண்டும்.
இப்போது இருக்கும் சூழ்நிலையிலேயே போக்குவரத்து நெரிசல் என்பது உச்சகட்டமாக இருக்கும் பட்சத்தில் வீட்டுக்கு வீடு கார் வாங்கினால் அனைத்து கார்களும் பார்க்கிங் செய்வது எப்படி? சாலைகளில் பயணிப்பது எப்படி என்றெல்லாம் கேள்விகள் இருக்கின்றன. இதற்கெல்லாம் உச்சகட்டமாக பாரதிய ஜனதா கட்சியுடன் அவர் மோதல் போக்கை கடைபிடிக்கும் பொழுது தேவையான நிதியை எப்படி திமுக அரசுக்கு தரவில்லையோ அதே போல் விஜயின் அரசாங்கத்துக்கும் மேல் இடத்திலிருந்து கிடைப்பதற்கான வாய்ப்பு இல்லை.
அப்படியானால் எந்த வகையில் பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்த முடியும் எந்த வகையில் பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்த வேண்டும் என்றாலும் முதலில் முதலீடு செய்ய வேண்டும். முதலீடு செய்வதற்கான பணம் எங்கே இருக்கிறது . தற்போது இருக்கிற பொருளாதாரம் வளர்ச்சியை காட்டி உச்சகட்ட அளவில் கடன் பெற்றுவிட்டார்கள் இனிமேல் கடன் பெறுவதற்கும் வாய்ப்பில்லை என்பது முக்கிய செய்தியாக பார்க்கப்படுகிறது.


