Temba Bavuma: மனவேதனை அடைந்த தென்னாப்பிரிக்க கேப்டன்!

Advertisements

வார்த்தைகளால் இந்தத் தோல்வியை என்னால் விவரிக்க முடியவில்லையெனத் தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் டெம்பா பவுமா மனவேதனை தெரிவித்துள்ளார்.

கொல்கத்தா: இந்தியாவில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற முதல் அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி 70 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

இந்த நிலையில், நேற்று நடைபெற்ற 2-வது அரையிறுதி ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதின. அதில் ஆஸ்திரேலியா மூன்று விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.இந்நிலையில் இந்தத் தோல்விகுறித்து பேசிய தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் டெம்பா பவுமா கூறுகையில்;- ‘வார்த்தைகளால் இந்தத் தோல்வியை என்னால் விவரிக்க முடியவில்லை.

இந்த ஆட்டத்தில் நாங்கள் பந்துவீச்சு மற்றும் பேட்டிங் என இரண்டிலுமே சரியான துவக்கத்தை பெறவில்லை. இந்தத் தொடர் முழுவதுமே நாங்கள் சிறப்பாக விளையாடியிருந்தாலும் ஒரு தரமான அணிக்கு எதிராக விளையாடும்போது இது போன்ற சரிவு ஏற்படுவது நடக்கக்கூடிய ஒன்றுதான். குறிப்பாக ஆரம்பத்திலேயே நாங்கள் 4 விக்கெட்டுகளை இழந்ததால் எங்களுக்குச் சரியான தொடக்கம் கிடைக்கவில்லை. இருப்பினும் மில்லர் மற்றும் கிளாஸென் ஆகியோர் சிறப்பாக விளையாடினர். கிளாஸென் இறுதிவரை விளையாட முடியாமல் போனது சற்று பின்னடைவை ஏற்படுத்தியது எனக் கூறியுள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *