
நாடு முழுவதும் அடுத்தாண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில், 5 மாநிலங்களுக்கான சட்டசபைத் தேர்தல் நடைபெற்றுள்ளது. மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா, சத்தீஸ்கர் மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்களில் நடைபெற்றுள்ள சட்டசபை தேர்தல்களுக்கான முடிவுகள் வரும் 3ம் தேதி அறிவிக்கப்பட உள்ளது.
மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்களில் சட்டசபை தேர்தல் ஏற்கனவே நடைபெற்ற நிலையில், இன்று தெலங்கானா மாநிலத்தில் ஒரே கட்டமாக இன்று சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது.
ஏற்கனவே நிகழ்ந்த கருத்துக்கணிப்பின்படி, மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றும் என்றும், ராஜஸ்தானில் பா.ஜ.க. ஆட்சியை கைப்பற்றும், சத்தீஸ்கரில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை கைப்பற்றும் என்றும், மிசோரமில் மிசோரம் தேசிய முன்னணி கைப்பற்றும் எனவும், தெலுங்கானாவில் இழுபறி நீடிக்கும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
அந்தவகையில் தனியார் தொலைக்காட்சி நடத்திய கருத்துக்கணிப்பில் சத்தீஸ்கரில் 41 முதல் 53 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகியுள்ளது. பா.ஜ.க. 36 முதல் 48 இடங்கள் கைப்பற்றும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
ராஜஸ்தானில் உள்ள 200 தொகுதிகளில் பாஜக 100 முதல் 122 தொகுதிகளிலும், காங்கிரஸ் 62 முதல் 85 தொகுதிகளிலும், மற்றவை 14 முதல் 15 வரை வெற்றி பெற வாய்ப்பு- கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது.
மேலும் மத்திய பிரதேசம் மற்றும் தெலுங்கானாவில் பாஜக காங்.க்கு இடையே இழுபறிநிலவும் என்றும் தெரிவிக்கப்படுள்ளது.
சட்டீஸ்கரில் மொத்தம் உள்ள 90 தொகுதிகளில் காங்கிரஸ் 42 முதல் 53 தொகுதிகள் வரையும், பாஜக 34 முதல் 45 தொகுதிகள் வரையும், மற்றவை 1 முதல் 2 தொகுதிகளில் கைப்பற்றும்என்றும்.
மிசோரமில் உள்ள 40 தொகுதிகளில் ZPM 15 முதல் 25 தொகுதிகளில் MNF 10 முதல் 14 தொகுதிகளில், காங்கிரஸ் 5 முதல் 9 தொகுதிகளிலும், பாஜக 1 தொகுதிகளில் கைப்பற்றும் என கருத்து கணிப்பு வெளியாகியுள்ளது.மேலும் தெலுங்கானாவில் BRS-66 இடங்களையும் , காங்கிரஸ் 37 இடங்களையும், பாஜக 07 இடங்களையும் மற்றவை 09 இடங்களையும் கைப்பற்றும் என்று கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது.


