இந்தியாவுக்கு வரும் ரஷ்ய அதிபர் புதின்! பிரதமர் மோடியுடன் சந்திப்பு?

இந்தியா-அமெரிக்கா இடையேயான வர்த்தக உறவு மோசமடைந்துள்ள நிலையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இந்த மாத இறுதியில் இந்தியா வரவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

ரஷ்யா – உக்ரைன் இடையே மூன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக போர் நீடித்து வரும் நிலையில், போர்நிறுத்தத்திற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்தன.

இதனால், ஆத்திரமடைந்த டிரம்ப், ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு கடுமையான வரிவிதிப்பை அறிவித்தார். ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் மற்றும் ஆயுதங்கள் வாங்கும் இந்தியாவுக்கு 25 சதவீத வரி விதித்தபோதும், ரஷ்யாவிடம் இருந்து இறக்குமதி செய்யும் முடிவில் இருந்து இந்தியா பின்வாங்கவில்லை.

இதையடுத்து, குறிப்பிட்ட இந்திய பொருட்களுக்கு இனிமேல் 50 சதவீத வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். இதனால், இந்தியா – அமெரிக்கா இடையேயான வர்த்தக உறவு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த சூழலில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இந்த மாத இறுதியில் இந்தியா வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அப்போது, பிரதமர் மோடியை சந்தித்து ஆலோசனை நடத்தவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *