வகுப்பறையில் ஆசிரியர் குத்திக்கொலை !

Advertisements

தஞ்சாவூர்:

தஞ்சாவூர் அரசுப் பள்ளி வகுப்பறையில் ஆசிரியை ரமணி கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம் அருகே சின்னமனை பகுதியைச் சேர்ந்தவர் முத்து. இவரது மகள் ரமணி என்பவர் மல்லிப்பட்டினம் அரசுப் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றி வந்தார். இவருக்கு வயது 26. இவர் ஆசிரியை கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு பணியில் சேர்ந்தார். பள்ளி வகுப்பறையில் இன்று (நவ.,20) ரமணியை சின்னமனை கிராமத்தைச் சேர்ந்த மதன் குமார் குத்திக்கொலை செய்தார்.

இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. மதன் குமாரை போலீசார் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். ஆசிரியை ரமணியை பெண் கேட்டுச் சென்றபோது, விருப்பம் இல்லையெனக் கூறியதால், மதன் கொலை செய்ததாக, முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. கையில் மறைத்து வைத்திருந்த கத்தியால், வகுப்பறையில் கழுத்தில் குத்தி ஆசிரியை ரமணி கொலை செய்யப்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *