Advertisements

அன்புமணி தலைமையிலான பாட்டாளி மக்கள் கட்சி தனியாக உடைந்த நிலையில் தற்போது உள்கட்சி பூசலுக்கு ஆதாரமாக திகழ்ந்த மருத்துவர் ராமதாஸின் இரண்டாவது மனைவி சுசீலா தேர்தல் களத்தில் இறங்குகிறார். இது தொடர்பாக வட மாவட்டங்களில் உள்ள வன்னியர்கள் மத்தியில் மிகப்பெரிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது .
பாட்டாளி மக்கள் கட்சியை நிறுவியதோடு மட்டுமல்லாமல் அந்த கட்சியை வளர்த்து ஆளாக்கியவர் மருத்துவர் ராமதாஸ். இதன் பின்னர் அவரது வழிகாட்டுதலின் பேரில் மகன் அன்புமணி மிகப் பெரிய அளவில் அரசியல் தலைவராக உருமாறினார் . இதனிடையே தந்தை மருத்துவர் ராமதாஸுக்கும் மகன் அன்புமணிக்கும் இடையே காத்து மோதல்கள் ஏற்பட்டு தற்பொழுது பாட்டாளி மக்கள் கட்சி இரண்டாக உடைந்து அன்புமணியின் பயணம் மிக வேகமாக பயணிக்கிறது .
இதன் பின்னணியில் குடும்பச் சண்டை தான் முக்கிய காரணம் என்பது திரை மறைவு செய்தியாகும் . மருத்துவர் ராமதாஸ் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக சுசிலா என்ற பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கிறார் . சுசிலா என்பவர் மருத்துவர் ராமதாஸ் கிளினிக் நடத்திய போது மருத்துவ உதவியாளராக வேலை பார்த்தவர். அந்த வகையில் மருத்துவர் ராமதாஸ் தனது உடல்நிலை காரணமாக தேவையான உதவிகள் தேவைப்படும் பொழுது சுசிலாவை பயன்படுத்திக் கொண்டார் .
இதற்கிடையே சுசிலாவை அவர் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்ட தகவலும் மறைக்கப்பட்டு குடும்பத்திற்குள் பூசல்கள் நடைபெற்று வந்தன. சுசிலாவுக்கு மாதம் தோறும் மிகப்பெரிய தொகையை வழங்கி வந்ததுடன் ஏராளமான சொத்துக்களையும் அவரது பெயரில் ராமதாஸ் எழுதி வைத்து வந்திருக்கிறார் .
தற்பொழுது இந்தப் பிரச்சினை தான் பூதாகரமாக வெடித்த நிலையில் அன்புமணி ராமதாஸ் போர்க்கோடி பிடித்தார். இருந்த போதிலும் சுசிலாவை கைவிட முடியாது என்பதில் மருத்துவர் ராமதாஸ் உறுதியாக இருக்கிறார்
இந்த நிலையில் 40 ஆண்டுகளாக திரை மறைவில் இருந்த சுசிலா தற்பொழுது வெளிச்சத்துக்கு வருகிறார். புதிதாக தொடங்கி இருக்கும் அய்யா பாமக என்ற கட்சிக்கு அவர்தான் தலைமை தாங்குகிறார் அவருக்கு முக்கிய பொறுப்பு தரப்பட போவதாகவும் தெரிகிறது . இந்த கட்சி குறித்து தேர்தல் கமிஷனில் பதிவு செய்வதற்கான நடவடிக்கைகள் தற்போது தொடங்கிவிட்டன.
ராமதாசுக்கு வயதாகி விட்ட நிலையில் அவராவ் வேகமாக செயல்பட முடியவில்லை எனவே முகிலன் சுசிலா போன்றவர்களை முன்னிறுத்த அவர் முடிவு எடுத்திருப்பதாக சொல்லப்படுகிறது . அந்த வகையில் சுசீலாவை மருத்துவர் ராமதாசே பொது மேடை ஒன்றில் அறிமுகப்படுத்துவதற்கும் தயாராகி வருவதாக தெரிகிறது .
இதற்கிடையே, மருத்துவர் ராமதாஸ் தரப்பிலான பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து பின்னடைவுகளை சந்தித்து வருகிறது. மருத்துவர் ராமதாஸ் எடுக்கும் முடிவுகளும் நீதிமன்றங்களில் அவர் போராடும் வழக்குகளும் தோல்விகளையே சந்தித்து வருகின்றன . இந்த நிலையில் தனது இரண்டாவது மனைவியான சுசிலாவை அரசியலில் அறிமுகப்படுத்தினால் அது அவருக்கு பின்னடைவாகத்தான் இருக்கும் என வன்னியர் சமூகத்தினர் கருதுகிறார்கள் .
இதனால் சுசிலா அரசியலுக்கு வருவதை வன்னியர் சமுதாயத்தினர் விரும்பாத நிலையில் எதிர்ப்புகளை தெரிவிக்க தொடங்கி இருக்கிறார்கள் . இருந்தபோதிலும் அய்யா பாட்டாளி மக்கள் கட்சியை திரை மறைவில் ஆவது சுசிலா தான் செயல்படுத்துவார் என்பது முக்கிய செய்தியாக பார்க்கப்படுகிறது .
Advertisements



