சைதாபேட்டை வடகறி!
வடகறி என்றால் சிலருக்கு பிடிக்கும் சிலருக்கு பிடிக்காது..! பிடித்தவர்களுக்கு அதனுடைய சுவை அவ்வளவு பிடிக்கும். வடகறி எவ்வளவு பேருக்கு செய்ய தெரியும் என்று தெரியாது. அதை செய்வது மிகவும் கடினமான ஒன்றாக நினைத்துக் கொண்டு இருப்பார்கள்.
ஆனால் அதை செய்வது மிகவும் எளிமையான ஒன்றாக உள்ளது. அது எப்படி செய்யலாம் என்று தெரிந்து கொள்வோம் வாங்க..! சைதாபேட்டை என்றாலே அங்கு இந்த வடகறி தான் சிறப்புமிக்கது. வாங்க அந்த சிறப்பு மிக்க வடகறியை எப்படி செய்வது என்று தெரிந்து கொள்வோம்..!
செய்முறை:
முதலில் மிக்சி ஜாரில் 2 கைப்பிடி அளவு கடலைப்பருப்பை எடுத்துக் கொள்ளவும், கடலைப்பருப்பை 1 மணி நேரம் ஊறவைத்து அதனை கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
அதன் பின் அதில் உப்பு மஞ்சள் தூள் சேர்த்து பிசைந்து கொள்ளவும். அடுத்து கடாயை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி பிசைந்து வைத்துள்ள மாவை எண்ணையில் போட்டு சிவப்பு நிறம் மாறாமல் பொறித்து எடுத்துக் கொள்ளவும்.
அடுத்து கடாயை அடுப்பில் வைத்து அதில் கொஞ்சம் எண்ணெய் ஊற்றி 1 டீஸ்பூன் சோம்பு, பிரியாணிக்கு தேவையான பொருட்கள் சேர்த்து, அடுத்து அதில் 1 பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளவும். அதனுடன் 2 பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு வதக்கி கொள்ளவும்.
அனைத்தும் ஒரு முறை வதங்கிய பின் அதில் பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து கொள்ளளவும். அடுத்து 1 டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள், மல்லித்தூள், 1/2 ஸ்பூன் கரம் மசாலா, 1/4 ஸ்பூன் சோம்பு தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்துவிட்டு அதனுடன் கொஞ்சம் தண்ணீர் ஊற்றி மூடி வைக்கவும்.
அடுத்து கொஞ்சம் கெட்டியாக மாறிய பின் அதனை திறந்து பொறித்து வைத்துள்ள கடலைப்பருப்பை உடைத்து அதில் போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி அப்படியே மூடி வைத்து விடவும். கொஞ்சம் கெட்டியாக மாறிய பின் அதனை திறந்து கொத்தமல்லி தூவி நெய் சேர்த்து எல்லோருக்கும் பரிமாறுங்கள் சுவை தனியாக இருக்கும்.