United States: இந்திய மாணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

Advertisements

அமெரிக்காவில்  உடற்பயிற்சி கூடத்தில் தாக்கப்பட்ட இந்திய மாணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

வருண்ராஜ் என்ற இந்திய மாணவன்,தெலுங்கானவைச் சேர்ந்தவர். அமெரிக்காவில் உள்ள வல்பரைசோ பல்கலைக்கழகத்தில் கம்ப்யூட்டர் பிரிவில் முதுகலை பயின்று வந்துள்ளார். இவர் கடந்த அக்டோபர் 29 -ஆம் தேதி ஒரு தனியார் உடற்பயிற்சி கூடத்தில் ஜோர்டன் அண்ட்ரெடே என்பவரால் கத்தியால் பலமாகத் தாக்கப்பட்டுள்ளார். உடனே அவர் அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் நவம்பர் 8-ஆம் தெதி இறந்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

சிகாகோவில் உள்ள வல்பரைசோ தனியார் பல்கலைக் கழகம்  மாணவரின் இறப்பு குறித்து ஆழந்த இரங்கலைத் தெரிவித்துள்ளது. எங்கள் பல்கலைக்கழகம் ஒரு நல்ல மாணவனை இழந்துவிட்டது என்றும் அவரது பெற்றொர்களுக்கும் நண்பர்களுக்கும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

பல்கலைக்கழகத்தின் சார்பில் வருணுக்கு நினைவுச் சின்னம் கல்லூரி வளாகத்தில் அமைக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த கொடூர கொலை குறித்து நவம்பர் 8 -ஆம் தேதி அமெரிக்க வாழ் தெலுங்கு சமூக சங்கம் USD 90,000 வருண் குடும்பத்தாருக்கு வழங்க கோரிக்கை வைத்துள்ளது.

கொலை செய்த நபரை ஏற்கனவே கைது செய்து சிறையில் அடைத்துள்ளது காவல்துறை. திட்டமிட்ட கொலையாக பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *