
விஜய் கட்சியின் பெயர் அறிவிப்பை தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் தங்களுடைய கருத்தை தெரிவித்து வருகின்றனர்.அந்தவகையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் நடிகர் விஜய்க்குவாழ்த்து தெரிவித்துள்ளனர்.
நடிகர் விஜய் இன்று தனது அரசியல் கட்சியை தொடங்கி உள்ளார். அவரது கட்சிக்கு ‘தமிழக வெற்றி கழகம்’ என பெயர் வைத்துள்ளார். வரும் 2024 பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதில்லை. எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை என தெரிவித்தார்.
விஜய் கட்சியின் பெயர் அறிவிப்பை தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் தங்களுடைய கருத்தை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நடிகர் விஜய் அரசியலுக்கு வந்துள்ளதை வரவேற்றுள்ளார். தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜய் அவர்களுக்கு பாஜக தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில்,”தமிழக மக்களைச் சுரண்டிக் கொண்டிருக்கும் ஊழல் அரசியலுக்கு எதிராகவும், பாகுபாடற்ற, நேர்மையான, அரசியல் மாற்றம் உருவாகவும், மக்களுக்காகப் பணியாற்ற, ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற பெயரில் புதிய கட்சி தொடங்கியிருக்கும் சகோதரர் விஜய் அவர்களை வாழ்த்தி வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்,” இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதேபோல சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விஜய் அரசியல் கட்சி அறிவிப்பு குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர் ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம்,அந்தவகையில் நடிகர் விஜய்க்கு வாழ்த்துத்தெரிவித்து கொள்வதாக கூறினார்.



