தமிழகத்தில் இன்று சில மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்..!

தமிழகக் கடலோரப் பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுகிறது. இதனால் இன்று மேற்குத் தொடர்ச்சி மலையோர மாவட்டங்கள், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரியிலும் மிதமான மழை பெய்யக் கூடும்.

நாளை மேற்குத் தொடர்ச்சி மலையோலர மாவட்டங்கள் வட தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரயிலும் மிதமான மழை பெய்யக் கூடும். இன்று காலை எட்டரை மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் அதிக அளவாகச் சிவகங்கை மாவட்டம் வேதியரேந்தலில் 5 செண்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.

ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை

கன்னியாகுமரி மாவட்டக் கடலோரப் பகுதிகளுக்கு இன்று இந்திய கடல் சார் தகவல் சேவை மையம் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. கடலில் அலைகளின் வேகம் மற்றும் அழுத்தம் அதிகமாக இருக்கும் என்பதால் மீனவர்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தியுள்ளது. கடலோரப் பகுதி மக்களும், சுற்றுலாப் பயணிகளும் கடலுக்கு அருகில் செல்ல வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *