டிரம்பின் காசா அமைதித் திட்டத்தை ஏற்க மறுத்தது இஸ்ரேல் – நெதன்யாகு..!

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முன்வைத்துள்ள காசா அமைதித் திட்டத்தை இஸ்ரேல் நிராகரித்துள்ளதாகப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் 15 அம்சங்களைக் கொண்ட காசா அமைதித் திட்டத்தை வெளியிட்டார். இத்திட்டத்திற்கு ஹமாஸ் அமைப்பு கொள்கையளவில் சம்மதம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், இஸ்ரேல் அமைச்சரவைக் கூட்டத்தில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கலந்து கொண்டு உரையாற்றினார்.

அப்போது, பேசிய அவர், காசாவில் இருந்து இஸ்ரேல் ராணுவம் முழுமையாக வெளியேறுவதற்கு முன்பு, ஹமாஸ் அமைப்பு தனது ஆயுதங்களை முழுமையாக கைவிட வேண்டும் என்று திட்டவட்டமாகக் கூறினார். ஹமாஸ் அமைப்பு தனது ஆயுதங்களை முழுமையாக கைவிடும் வரை இஸ்ரேல் ராணுவம் எந்தப் பகுதியிலிருந்தும் வெளியேறாது என்று தெரிவித்தார்.

மேலும், ஹமாஸ் ஆயுதங்களை கைவிடுவது மட்டும் போதாது என்றும், அது முழுமையான நிராயுதபாணியாக்கமாக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். டிரம்பின் திட்டம் தொடர்பாக அமெரிக்க அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், சில யோசனைகள் தங்களுக்கு ஏற்றதாக இருப்பதாகவும், சிலவற்றை ஏற்க முடியாது என்றும் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *