பட்ஜெட்டில் இளைஞர்களுக்கு சர்ப்ரைஸ்.! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா முக்கிய தகவல்.!

தமிழ்நாட்டின் எதிர்காலம் இளைஞர்கள்  தான் என முதலமைச்சர் நம்பியுள்ளார் என்றும், அதனடிப்படையில், இளைஞர்களுக்கான பல அறிவிப்புகள் பட்ஜெட்டில் இருக்கும் என்றும் சென்னை கிண்டியில் நடைபெற்ற மாநாட்டில், விளையாட்டுத்துறை அமைச்சர் ஆதவ்-அர்ஜுனா தெரிவித்துள்ளார்.

சென்னை கிண்டியில் உள்ள ஐ.டி.சி. சோழா நட்சத்திர ஹோட்டலில்,  தமிழ்நாடு உட்கட்டமைப்பு உச்சி மாநாடு நடைபெற்றது. மாநாட்டில் பங்கேற்ற பின்னர், விளையாட்டுத்துறை அமைச்சர் ஆதவ்-அர்ஜுனா செய்தியார்களை சந்தித்து பேசினார். அப்போது, ஜாதி, மத, வேறுபாடு இல்லாமல், அனைவருக்குமான அரசு என்ற சிந்தனையோடு செயல்பட்டு வருகிறோம் என்றும், எம்.ஜி.ஆர், அண்ணா ஆகியோரின் வழிகாட்டுதலின்படியும், அவர்களின் நோக்கத்தின்படியும் த.வெ.க.அரசு உருவாகியுள்ளது என்றும், அமைச்சர் ஆதவ்-அர்ஜுனா தெரிவித்தார்.

மேலும். கர்நாடகாவில் காங்கிரசுக்கும், பா.ஜ.க.விற்கும் அரசியல் சண்டை நடக்கிறது, ஆனால் தமிழகத்தின் வளர்ச்சி என்ற நோக்கத்தில் புது மாற்றத்திற்காகவும்,  வளர்ச்சிக்காகவும்,  சம உரிமைக்காகவும் த.வெ.க. விற்கு வாய்ப்பு வழங்கியுள்ளார்கள் என்றும், ஊழல் இல்லாத ஆட்சியை வழங்க வேண்டும் என மக்கள் வாய்ப்பு அளித்துள்ளார்கள் என்றும், கலைஞர் கருணாநிதி, எம்.ஜி.ஆர். ஜெயலலிதாவிற்கு பிறகு மக்கள் புது தலைவரை தேர்ந்தெடுத்துள்ளார்கள் என்றும் தெரிவித்த அவர், இந்தியாவில்  ஊழல்  இல்லாத முதல் மாநிலம் தமிழ்நாடு எனவும், ஊழலில்லா தமிழ் நாட்டில் முதலீடு செய்ய அனைத்து முதலீட்டாளர்களும் வரவேண்டும் எனவும், நாங்கள் உங்களுக்கு  முழு ஒத்துழைப்பு  தருகிறோம் என்றும், விளையாட்டுத்துறை அமைச்சர் ஆதவ்-அர்ஜுனா தெரிவித்துள்ளார்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *