Carrom Board Championship: தங்கம் வென்று முதல் இடம் பிடித்த தமிழக மாணவி!

Advertisements

வாழப்பாடி அருகே பேளூர் ஸ்ரீ சத்தி விகாஸ் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் எட்டாம் வகுப்பு மாணவி உத்திர பிரதேசம் மாநிலம் வாரணாசியில் நடைபெற்ற தேசிய அளவிலான சப் ஜூனியர் மகளிர் கேரம் போர்டு விளையாட்டு போட்டியில் தங்கம் வென்று முதல் இடம் பிடித்தார்.

உத்திரப்பிரதேசம் மாநிலம் வாரணாசியில் ஜீவன்டீஸ் பப்ளிக் பள்ளியில் 28/3,31/3 வரை தேசிய அளவிலான 46வது சப் ஜூனியர் மகளிர் கேரம் போர்டு விளையாட்டுப் போட்டி நடைபெற்றது இந்தப் போட்டியில் நாடு முழுவதும் சுமார் 600க்கும் மேற்பட்ட வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

அதைத் தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு பகுதியிலிருந்து சப் ஜூனியர் மகளிர் அணி சார்பில் ஆறு பெண்கள் கலந்து கொண்டு தங்கம் வென்றனர் அதில் ஒருவர் சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே பேளூர் ஸ்ரீ சக்தி விகாஸ் மேல்நிலைப் பள்ளி எட்டாம் வகுப்பு படிக்கும் ஸ்ரீநதி என்ற மாணவி தேசிய அளவில் தங்கம் வென்று முதலிடம் பிடித்துத் தமிழகத்திற்கும் அப்பள்ளிக்கும் பெருமை சேர்த்துள்ளார்.

அதைத் தொடர்ந்து சொந்த ஊர் திரும்பிய அந்த மாணவிக்குப் பள்ளி நிர்வாகத்தின் சார்பில் வாழப்பாடி பஸ் நிலையத்திலிருந்து பள்ளிவரை உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது அதைத்தொடர்ந்து வழி எங்கும் பொது மக்களும் சமூக ஆர்வலர்களும் சால்வை அணிவித்து இனிப்பு வழங்கி உற்சாகமாக வரவேற்பு அளித்தனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *