
நாடு அதை நாடு… அதை நாடாவிட்டால் ஏது வீடு… உலக மக்கள் அனைவருக்கும் இந்த வாசகம் பொருந்தும்.மன்னர் ஆட்சி முடிந்து மக்கள்ளாட்சி நடந்து வருகிறது. நீர் உயர நெல் உயரும். இப்பாடலில் குடி உயரக் கோன் உயர்வான்.மக்கள் உயர மன்னன் உயர்வான்.எனும் வைர வரிகள் வரும், சத்தியமான வார்த்தைகள்…
ஒரு நாடு சிறக்க தலைவன் செவ்வனே சட்டதிட்டங்கள் மற்றும் நலத்திட்டங்கள் தீட்டி மக்கள் நலனுக்குப் பாடுபட வேண்டும்.
ஜி-20 என்ற அமைப்பின் மூலமாக 20 நாடுகளைச் சேர்ந்த அதிபர்கள் மற்றும் தலைவர்கள் இம்மாநாட்டில் பங்கு பெற்று தங்கள் நாடுகளின் நலனுக்காகப் பல்வேறு ஒப்பந்தங்கள் செய்து ஒருவருக்கொருவர் பரஸ்பரம் ஆதரவு, அன்பு, உதவிகள், செயல்த்திட்டங்கள், தொழில் வளர்ச்சிகுறித்து விவாதித்து அவரவர் நாட்டிற்கு தேவையான நலத்திட்டங்களை மக்களுக்குச் சேவை ஆற்றி வருவது மகிழ்ச்சியான ஒரு முன்னெடுப்பு என்றே கூறலாம்.
ஆஸ்திரேலியா, பிரேசில், இத்தாலி, ஜெர்மனி உள்ளிட்ட 20 நாடுகள் பங்கு பெற்று 1999-ஆம் ஆண்டிலிருந்து நடைபெற்று வரும் இம்மாநாடு மிகச் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

பொருளாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் அதன் விளைவுகள உலகளாவிய கடன் மின் ஆற்றல், தொடர்பான பேச்சு வார்த்தை முன்னெடுத்து செயல்படுத்த ஆவண செய்யும். இந்த 18-வது உச்சி மாநாட்டை இந்தியா தலைமை தாங்கி நடத்துகிறது.
சென்ற ஆண்டு இந்தோனேசியாவில் நவம்பர் 15,16 தேதிகளீல் நடைபெற்றபோது, இந்த ஆண்டு ஜி-20 மாநாடு நடப்பதற்கான பொறுப்பை நரேந்திர மோடியிடம் ஒப்படைக்கப்பட்டது.
பொருளாதார திறன், உயரிய திட்டம் தேவையான நாடுகளுக்கு உதவி பேரிடர் காலங்களில் அத்தியாவசிய பொருள்கள் அனுப்புதல், பாதுகாப்பு, செல்வாக்கு அடிப்படையில் நோக்கின், இந்தியா 4-வது இடத்தில் உள்ளது. மகளிருக்கு அந்தஸ்து, அதிகாரம், டிஜிட்டல், பொது உள் கட்டமைப்பை உயர்த்துவது, தொழில் நுட்ப வளர்ச்சி, நிதி உதவி, உணவு உற்பத்தி, எரி பொருள் உற்பத்தி இவற்றைச் செவ்வனே உயர்த்துவதை இலக்காக இம்மாநாடு நடத்த பொறுப்பானது இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளாது.
இயற்கை பேரிடர் பேரிழப்பு தருணங்களீல் இந்தியா தனது உதவிக்கரம் நீட்டி ஆதரவு அளித்து வருகிறது.
கொரோனா பெருந்தொற்றின்போது உலக நாடுகளுக்குத் தடுப்பூசிகள் அனுப்பியது இந்தியாவின் உதவும் குணத்தைக் காட்டுகிறது.

உலக பொருளாதாரத்தில் 11-வது இடத்தில் இருந்த இந்தியா தற்போது 4-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது கவனிக்கத்தக்கது.
அமைதியான வாழ்க்கை சூழல், ஜனநாயகம் நிறைந்த ஆட்சி, உயரிய கலாச்சாரம், அறிவியல் முன்னேற்றம், தொழில் நுட்ப வளர்ச்சி, என அனைத்து துறைகளிலும் அசுர வளர்ச்சி கண்டுள்ளது நமது பாரதம். தனக்கென வாழாது பிறர்க்கென வாழும் நாடு தான் இந்தியா.
தன்னலம் கருதாது, இலங்கையில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டபோது பால் முதற் கொண்டு தாயுள்ளத்தோடு அனுப்பி உதவிய்து அனைவரும் அறிந்ததே.
தற்போது புது தில்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் அமைந்திருக்கும் பாரத் மண்டபத்தில் உள்ள ஜி-20 உச்சி மாநாடு நடைபெற்று வருகிறது.
`யாதும் ஊரே யாவரும் கேளீர் ‘. கணியன் பூங்குன்றனார் வாக்குப் படி அனைத்து நாட்டு மக்களும் நம் நண்பர்களே…

