டாலரை பலவீனப்படுத்த விருப்பவில்லை!

Advertisements

தோஹா:

கத்தார் நாட்டில் 22-வது தோஹா மாநாடு நடந்தது. இதில் இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் பங்கேற்றார். கத்தார் மற்றும் நார்வே நாடுகளின் வெளியுறவுத்துறை மந்திரிகள் கலந்துகொண்டனர்.

அமெரிக்க அதிபராகத் தேர்வு செய்யப்பட்ட டொனால்டு டிரம்ப், சமீபத்தில் பேசுகையில், பிரிக்ஸ் நாடுகளுக்கு 100 சதவீத வரி விதிக்கப்படும் எனக் கூறினார். பிரிக்ஸ் நாடுகளுக்கு எனத் தனியாகக் கரன்சி நோட்டுகள் அறிமுகம் என வெளிவந்த செய்திபற்றிப் பேசுகையில் இதனைக் குறிப்பிட்டார்.

இந்நிலையில், மத்திய மந்திரி ஜெய்சங்கர் தோஹா மாநாட்டில் பேசியது,

டிரம்பின் முதல் நிர்வாகத்தின்போது, அமெரிக்காவுடன் நாங்கள் நல்ல, வலுவான உறவைக் கொண்டிருந்தோம்.

சில பிணக்குகள் உள்ளன. அவை, வர்த்தகம் சார்ந்தவையாக உள்ளன. டிரம்ப் அதிகாரத்தின் கீழ்தான் குவாட் அமைப்பு மீண்டும் தொடங்கப்பட்டது என நினைவுப்படுத்த விரும்புகிறேன்.

பிரதமர் மோடி மற்றும் டிரம்ப் இடையே தனிப்பட்ட நட்புறவு உள்ளது. அது இரு நாடுகளுக்கு இடையேயான வலுவான இருதரப்பு உறவுக்குப் பங்காற்றியது.

இந்தியா ஒருபோதும் டாலரின் மதிப்பைப் பலவீனப்படுத்தியதில்லையென எப்போதும் கூறிவருகிறோம். பிரிக்ஸ் கரன்சிக்காக எந்தவித முன்மொழிவும் இதுவரை இல்லை. நிதிப்பரிமாற்ற விஷயங்களைப் பற்றியே பிரிக்ஸில் விவாதிக்கப்பட்டு வருகிறது.

அமெரிக்கா எங்களுடைய மிகப் பெரிய வர்த்தக நட்பு நாடு. டாலரை பலவீனப்படுத்த எங்களுக்கு ஆர்வம் இல்லையெனத் தெரிவித்தார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *