போதைப்பொருள் ஒழிப்பு – சிறந்த காவலர்களுக்கு முதல்வர் விஜய் பதக்கம் வழங்கிச் சிறப்பு!

தமிழ்நாட்டில் போதைப்பொருள் ஒழிப்பில் சிறப்பாகப் பணியாற்றிய காவலர்களுக்குப் பதக்கங்களை முதலமைச்சர் ஜோசப் விஜய் வழங்கிச் சிறப்பித்தார்.

தமிழ்நாடு காவல்துறையில் போதைப்பொருள் ஒழிப்பில் சிறப்பாகப் பணியாற்றிய காவலர்களுக்குப் பதக்கங்கள் வழங்கும் விழாவும், போதையில்லாத் தமிழ்நாடு என்று மாநில அளவிலான பெருந்திரள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியும் சென்னை மாநிலக் கல்லூரியில் நடைபெற்றது.

இந்த விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் கலந்துகொண்டு போதைப்பொருள் ஒழிப்பு உறுதிமொழி ஏற்றுக்கொண்டார்.

அதன்பின்னர் தமிழகத்தில் போதைப்பொருள் ஒழிப்பு, போதைப்பொருள் தடுப்பு ஆகியவற்றில் சிறப்பாகச் செயல்பட்ட காவல்துறை அதிகாரிகள் 15 பேருக்கு முதலமைச்சர் பதக்கங்களை வழங்கிச் சிறப்பித்தார்.

அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் காவல்துறையினர் பறிமுதல் செய்த போதைப்பொருட்களை எரித்து அழிக்கும் நடவடிக்கை முதலமைச்சர் முன்னிலையில்  தொடங்கி வைக்கப்பட்டது. திருநெல்வேலி, கோவை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் போதைப்பொருட்களைத் தீவைத்து அழிக்கும் பணிகளை முதலமைச்சர் காணொலி வாயிலாகப் பார்வையிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *