
பீகார் தேர்தல் முடிவுகள் எந்த விதத்திலும் தமிழ்நாட்டை பாதிக்காது என்று காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வப் பெருந்தகை தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டையில் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வப் பெருந்தகை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து மக்கள் அச்சத்தில் உள்ளனர் என்று கூறினார்.
சிறுபான்மை பட்டியலின ஒபிசி மற்றும் எம்பிசி வாக்குகளை எடுப்பதற்கு அனுமதிக்க கூடாது என்றும் தேசிய கட்சியில் கூட்டணி குறித்து காங்கிரஸ் மேலிடம் தான் முடிவு எடுப்பார்கள் என்றும் தெரிவித்தார்.
இதை தொடர்ந்து, பீகார் தேர்தல் முடிவுகள் எந்த விதத்திலும் தமிழ்நாட்டை பாதிக்காது என்றும் 2029 ஆம் ஆண்டு தேர்தலில் ராகுல் காந்தி பிரதமராக பதவி ஏற்பார் என்றும் கூறினார்.



