cyclone warning:சென்னை – அந்தமான் விமானங்கள் இன்று ரத்து!

Advertisements

சென்னை – அந்தமான் விமானங்கள் ரத்து குறித்து பயணிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு விட்டதாகச் சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னை:வங்க கடலில் உருவாகியுள்ள ரெமல் புயல் காரணமாக, ஏர் இந்தியா விமான நிறுவனம் அந்தமானுக்கு இயக்கப்படும் விமான சேவைகளை, இன்று ஒரு நாள், முழுவதுமாக ரத்து செய்துள்ளது.

அதன்படி சென்னையிலிருந்து இன்று காலை 5.05 மணிக்குப் புறப்பட்டு, காலை 7.15 மணிக்கு அந்தமான் போய்ச் சேர வேண்டிய ஏர் இந்தியா பயணிகள் விமானம், அதைப் போல் 7.55 மணிக்கு அந்தமானிலிருந்து புறப்பட்டு, காலை 10.20 மணிக்கு, சென்னை வந்து சேர வேண்டிய ஏர் இந்தியா பயணிகள் விமானம், ஆகிய 2 விமானங்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன.

அதேபோல அந்தமானுக்கு, கொல்கத்தாவிலிருந்து செல்லும் ஏர் இந்தியா பயணிகள் விமானம், விசாகப்பட்டினத்திலிருந்து செல்ல வேண்டிய ஏர் இந்தியா பயணிகள் விமானம், அதைப் போல் அந்தமானிலிருந்து கொல்கத்தா, விசாகப்பட்டினம் ஆகிய நகரங்களுக்குச் செல்ல வேண்டிய ஏர் இந்தியா விமானங்களும், இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன.

வங்க கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தம் மண்டலம் ரெமல் புயலாக வலுப்பெறுவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து பயணிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு விட்டது என்று சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *