கட்சியை வெளிப்படைத்தன்மையுடன் நடத்தி வருகிறோம் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டியின் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்து வந்தாலும் அவரை அப்பபதவியில் இருந்து எப்போழுது வேண்டுமானாலும் நீக்கும் முடிவை க காங்கிரஸ் டெல்லி மேலிடம் அறிவிக்க உள்ளது . தமிழக காங்கிரஸ் கமிட்டியின் அடுத்த புதிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் யார் என்ற எதிர்பாரப்பு அக்கட்சியிர் எழுந்துள்ளது. தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருந்து வந்த கே. எஸ். அழகிரி மாற்றம் செய்யப்பட்டு கடந்த 2024 ஆண்டு பிப்ரவரி 17 ஆம் தேதி செல்வபெருந்தகை மாநில தலைவராக நியமனம் செய்யப்பட்டார். நியமனம் செய்யப்பட்டு ஓர் ஆண்டுக்கு மேல் ஆகியுள்ள நிலையில் செல்வப்பெருந்தகையால் தமிழக காங்கிரஸ் கமிட்டியில் புதிய நிர்வாகிகள் நியமனமோ, மாவட்ட தலைவர்களின் சீரமைப்போ சரியாக செய்ய முடியவில்லை என்று கூறப்படுகிறது. முன்னாள் மூத்த காங்கிரஸ் தலைவர் கே. எஸ். அழகிரிக்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஒத்துழைப்பு அளித்தது போல் தற்போதைய தலைவர் செல்வபெருந்தகை க்கு ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
முன்னதாக, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையை மாற்ற வேண்டும் என்று தமிழக மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கரை கடந்த பிப்ரவரி மாதம் டெல்லியில் சந்தித்து மாவட்டத் தலைவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் புகார் தெரிவித்தனர். இது தொடர்பாக பதில் அளித்த செல்வப்பெருந்தகை, கட்சி விதிகளின்படி பதவிக்காலம் முடிந்த காலாவதியான தலைவர்கள் புகார் கூறுகிறார்கள். கட்சியை வெளிப்படைத்தன்மையுடன் நடத்தி வருகிறோம் என்று தெரிவித்து இருந்தார். இந்நிலையில் தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியை பெற காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கார்த்தி சிதம்பரம், ஜோதிமணி ஆகியோர் முயர்ச்சி செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. கார்த்தி சிதம்பரம் தனது ஆதரவாளர்கள் மட்டுமல்லாது மறைந்த முன்னாள் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இலங்கோவன் ஆதரவாளர்கள் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசு ஆதரவாளர்களிடமும் ஆதரவு திரட்டி வருகிறார். பதவியில் இருந்து செல்வப்பெருந்தகை நீக்கப்பட்டால் தனக்கு ஆதரவு அளிக்க அவர் கேட்டு கொண்டுள்ளார். காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற மக்களவையின் எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி, தேசிய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்காவிடம் நெருக்கமாக இருப்பதால் தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் பதவியை பெற்று விட உறுதியாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சியை கர்ம வீரர் காமராஜர் ஆட்சி என்று கூறி வருவது காமராஜர் தலைமையிலான காங்கிரஸ் கட்சியின் ஆட்சியை கொச்சை படுத்துவது போல உள்ளது, மூத்த காங்கிரஸ் தலைவர்களுடன் கலந்து பேசாமல் தன்னிச்சையாக செயல்படுவது. காங்கிரஸ் கமிட்டியின் விதிமுறைகளுக்கு முரணாக செயல்படுவது, காமராஜர் அறக்கட்டளை நிதியில் இருந்து ரூ. 4 கோடியை கையாடல் செய்துள்ளது, காங்கிரஸ் கட்சியின் விதி முறைகளுக்கு எதிராக செயல்பட்டு வரும் செல்வப்பெருந்தகையை உடனடியாக மாற்றி புதிய காங்கிரஸ் கமிட்டியின் தலைவரை நியமிக்க வேண்டும் என்று தமிழக மேலிட பொறுப்பாளர் தமிழக பொறுப்பாளர் கிரிஷ் சோடாங்கரிடம் சமீபத்தில் புகார் அறிக்கை கொடுத்தனர்.
இந்த புகார் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, அமைப்பு செயலாளர் கே. சி. வேணுகோபால் ஆகியோரிடம் புகார் அறிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கர்ம வீரர் காமராஜர் அமர்ந்த இருக்கையில் அமருவதற்கு தகுதியற்ற ஒருவர் செல்வப்பெருந்தகை என்றும், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவராக நீடிக்க கூடாது என்பதால் அவரை மாற்றியே ஆக வேண்டும் என்று காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் செல்வப்பெருந்தகைக்கு எதிராக போர்க்கொடி தூக்கி உள்ள நிலையில் செல்வப்பெருந்தகையை காங்கிரஸ் கமிட்டியின் மாநில தலைவர் பொறுப்பில் இருந்து மாற்றப்படும் அறிவிப்பு எந்த நேரத்திலும் அகில இந்திய காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு தமிழக காங்கிரஸ் கமிட்டியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் எழுந்துள்ளது. மேலும் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் அடுத்த புதிய தலைவர் யார் என்ற எதிர்பார்ப்பு காங்கிரஸ் கட்சியிலும், தமிழக அரசியல் களத்திலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
2026 ல் நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியிலே தொடர்ந்து இடம்பெற்று தேர்தலை சந்திக்கும் மானால் குறைந்தபட்சம் 50 இடங்களை கேட்டு பெற்று அமோக வெற்றி பெற்று ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு வேண்டும் என்ற இலக்குடன் கூட்டணியை புதுப்பிக்க வேண்டும் அல்லது திமுக கூட்டணியில் இருந்து வெளியேறி காங்கிரஸ் கமிட்டி தலைமையில் மெகா கூட்டணி அமைத்து சட்டமன்ற தேர்தலை எதிர்கொண்டு கர்மவீரர் காமராஜர் ஆட்சியை மீண்டும் அமைக்கும் அரசியல் களப்பணிகளில் ஈடுபடுவதற்கு பதிலாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சியை காமராஜர் ஆட்சி என்று கூறி வருவது எந்த காங்கிரஸ் நிர்வாகிகலாலும் தொண்டர்களாலும் ஏற்றுக்கொள்ளவே முடியாது என்றுதான் சொல்ல வேண்டும். தமிழகத்தில் 1954 ஆம் ஆண்டு ஏப்ரல் 13 முதல் 1963 ஆம் ஆண்டு அக்டோபர் 2 ஆம் தேதி வரை 9 ஆண்டுகளுக்கு மேலாக தமிழகத்தில் கர்மவீரர் காமராஜர் ஆட்சியை நடைபெற்றது . குறிப்பாக காமராஜர் ஆட்சியை ஒருபோதும் தற்போதைய தமிழகத்தின் முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சியுடன் ஒப்பிடவே முடியாது ஒப்பிடவே கூடாது என்றுதான் சொல்ல வேண்டும்.

