கூலி படத்தின் பவர்ஹவுஸ் பாடல் 10 கோடி பார்வையாளர்களை கடந்து சாதனை.!

Advertisements

பிரபல நடிகர் ரஜினிகாந்தின் கூலி படத்தின் பவர்ஹவுஸ் என்ற பாடல் இணையத்தில் 10 கோடி பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2025 ஆம் ஆண்டு கூலி படம் வெளியானது. இப்படத்தில் நாகார்ஜுனா, உபேந்திரா, சத்யராஜ், சௌபின் ஷாஹிர், ஸ்ருதி ஹாசன் மற்றும் ராஷிதா ராம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

இதில், ஆமீர் கான் கௌரவத் தோற்றத்தில் நடித்திருந்தார். இப்படம் உலக அளவில் முதல் நாளில் 151 கோடி ரூபாயும் முதல் வாரத்தில் 229 கோடியே 65 லட்சம் ரூபாயும் வசூலித்து சாதனை படைத்தது. இதைத் தொடர்ந்து, இப்படத்தின் பவர்ஹவுஸ் பாடல் இணையத்தில் 10 கோடி பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *