Isha Koppikar: 22 வருடங்களுக்குப் பிறகு தமிழ் படத்தில்!

22 வருடங்களுக்குப் பிறகு தமிழுக்கு வரும் ‘நெஞ்சினிலே’பட நடிகை!

சென்னை: தமிழ், தெலுங்கு, இந்தி, மராத்தி, கன்னடம் ஆகிய மொழி களில் திரைப்படம் மற்றும் வெப்தொடர்களில் நடித்து வருபவர், இஷா கோபிகர். 47 வயது நிரம்பிய அவர், தனது கணவர் டிம்மி நரங் மற்றும் மகள் ரியான்னாவுடன் மும்பையில் வசித்து வருகிறார்.

இதற்கு முன்பு தமிழில் ‘காதல் கவிதை’, ‘என் சுவாசக் காற்றே’, ‘நெஞ்சினிலே’, ‘ஜோடி’, ‘நரசிம்மா’ ஆகிய படங்களில் நடித்துஇருந்தார். தற்போது சிவகார்த்திகேயன், ரகுல் பிரீத் சிங் நடிக்கும் ‘அயலான்’ படத்தில் வில்லி கேரக்டரை ஏற்றுள்ளார்.


இந்நிலையில், தமிழில் 22 வருடங்களுக்குப் பிறகு ‘அயலான்’ படத்தின் மூலம் மீண்டும் நடிக்க வந்துள்ள இஷா கோபிகர், படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில் பேசியபோது, ‘பல வருட இடைவெளிக்குப் பிறகு நான் கோலிவுட்டில் இருக்கிறேன் என்பதை நினைத்து அதிக சந்தோஷம் அடைகிறேன்.

இதற்காகப் படத்தின் டைரக்டர் ஆர்.ரவிக்குமாருக்கும், தயாரிப்பு நிறுவனத்துக்கும் நன்றி. நீங்கள் இவ்வளவு நாளாகக் காத்திருந்தீர்கள். கண்டிப்பாக ‘அயலான்’ படம் சூப்பராக இருக்கும். இதில் என்னையும் நடிக்க அழைத்ததற்கு ரொம்ப, ரொம்ப நன்றி. தொடர்ந்து தமிழில் நடிக்கத் தயாராக இருக்கிறேன்’ என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *