அமெரிக்கா – ஈரான் இடையிலான 14 அம்சங்கள் கொண்ட அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.
அமெரிக்கா வெள்ளை மாளிகை, அமெரிக்கா-ஈரான் அமைதி ஒப்பந்தம் குறித்து தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன் ஆகியோர் இரு நாடுகளுக்கும் இடையிலான மோதலை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் முறைப்படி கையெழுத்திட்டுள்ளதைப் பதிவிட்டுள்ளது.
இதன் மூலம் கடந்த சில மாதங்களாக அமெரிக்கா – ஈரான் இடையே நிலவி வந்த மோதல் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.



