தமிழகத்தில் முதலமைச்சர் மினி எமர்ஜென்சி ஆட்சி நடத்திக் கொண்டிருப்பதாக அதிமுக சாடல்

Advertisements

தமிழகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மினி எமர்ஜென்சி ஆட்சி நடத்திக் கொண்டிருப்பதாக அதிமுக துணைக் கொறடா ரவி தெரிவித்துள்ளார்.

அரக்கோணத்தில் அதிமுக பொதுக்கூட்டம் நகரச் செயலாளர் பாண்டுரங்கன் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் துணை கொறடா ரவி பேசும்போது, முதலமைச்சர் ஸ்டாலின் மினி எமர்ஜென்சி ஆட்சி நடத்திக் கொண்டிருப்பதாகவும், அதற்குக் காவல்துறை துணை போவதாகவும் குற்றஞ்சாட்டினார்.

இந்தக் கூட்டத்தில் அதிமுக பேச்சாளர் அமுதா, நிர்வாகிகள் சியாம் குமார், விஜயன், கிருஷ்ணமூர்த்தி, செல்வம், அணுக்குண்டு ஆறுமுகம் பிரகாஷ், பழனி ஆகியோர் கலந்துகொண்டனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *