Today’s rasipalan:இன்றைய ராசிபலன்:28.07.2024

மேஷம்


மேஷ ராசிக்காரர்களுக்கு மந்தமான நாளாக இருக்கிறது. சில சௌகரியங்களை சந்திக்க நேரிடும். பணியிடத்தில் தவறுகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் கவனமாகப் பணியாற்ற வேண்டும். மேலும், சக பணியாளர்களுடன் கவனமாகப் பணியாற்ற வேண்டும். காதலுக்கு உகந்த நாள் அல்ல. பணப்புழக்கம் சிறப்பாக இருக்காது. ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு உகந்த நாளாக இருக்காது. ஆன்மீக செயல்களில் ஈடுபடுவதன் மூலம் நற்பலன்களை பெறலாம். பணியிடத்தில் பணிகளைக் குறித்த நேரத்தில் முடிக்க முடியாத அளவிற்கு தாமதங்கள் ஏற்படும். துணையை சமாளிப்பதை கடினமாக உணர்வீர்கள். பணம் சேமிப்பதற்கான வாய்ப்பு இருக்காது. தாயின் உடல்நலத்திற்கு பணம் செலுத்த வேண்டியிருக்கும்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு சிறப்பான நாளாக இருக்கிறது. நீங்கள் பயனுள்ள முடிவுகளைச் செய்து முடிப்பீர்கள். பணியிடத்தில் பணிகளைக் குறித்த நேரத்தில் முடிப்பீர்கள். மேலும், மேலதிகாரிகளின் அங்கீகாரம் கிடைக்கும். துணையுடன் மகிழ்ச்சியான தருணங்களைப் பகிர்ந்து கொள்வீர்கள். பணப்புழக்கம் சீராக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

கடகம்


கடக ராசிக்காரர்களுக்கு உகந்த நாளாக இருக்கிறது. பணியிடத்தில் பணிகளைக் குறித்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். பணியிடத்தில் உன்னணியில் இருப்பீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களிடம் நல்லுறவு கொண்டிருப்பீர்கள்.அதிக பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்பு உள்ளது. ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

சிம்மம்


சிம்ம ராசிக்காரர்களுக்கு உகந்த நாளாக இருக்கிறது. பயணங்கள் ஏற்படலாம். பணியிடத்தில் வேலையில் சில விரும்பத் தகாத சூழ்நிலையைச் சந்திக்க நேரிடும். துணையுடன் சூடான விவாதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. பணவரவு குறைந்து காணப்படுகிறது. ஆரோக்கியத்தில் தலைவலி மற்றும் சளி ஏற்படலாம்.

கன்னி


கன்னி ராசிக்காரர்களுக்கு சாதகமான நாளாக இருக்காது. முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும். பணியிடத்தில் அதிக பணிகள் இருக்கும். இருந்தாலும் நீங்கள் எளிதில் செய்த்த்து முடித்து வெற்றி பெறுவீர்கள். காதலுக்கு உகந்த நாள் அல்ல. வரவைவிடச் செலவு அதிகமாக இருக்கும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது அவசியம்.

துலாம்


துலாம் ராசிக்காரர்களுக்கு சுமூகமான நாளாக இருக்காது. பணியிடத்தில் அதிக பணிகள் காணப்படும். மேலும், சக பணியாளர்களுடன் கவனமாகப் பழக வேண்டும். துணையுடன் அமைதியுடனும் பொறுமையுடனும் பேச வேண்டும். பணப்புழக்கம் போதிய அளவில் இருக்காது. துணையின் உடல்நலத்திற்காகச் செலவு செய்ய நேரிடும்.

விருச்சிகம்


விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு சாதகமான நாளாக இருக்கிறது. பணியிடத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். மேலும், புதிய வாய்ப்புகள் கிடைக்கும். துணையுடன் கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்புள்ளது. நிதிநிலைமை சிறப்பாக இருக்கும். ஆரோக்கியத்தில் காது மூக்கு தொண்டை பிரச்சனை ஏற்படலாம்.

தனுசு


தனுசு ராசிக்காரர்களுக்கு மந்தமான நாளாக இருக்கிறது. பணியிடத்தில் அதிக பணிகள் காணப்படும். குறித்த நேரத்தில் பணிகளை முடிக்க முடியாமல் அவதிப்படுவீர்கள். துணையுடன் கருத்து வேறுபாடு காணப்படும். நிதி வளர்ச்சி சிறப்பாக இருக்காது. ஆரோக்கியத்தில் சளி மற்றும் தலைவலி ஏற்பட வாய்ப்புள்ளது.

மகரம்

மகரம் ராசிக்காரர்களுக்கு சுமாரான நாளாக இருக்கிறது. பணியிடத்தில் சில அசௌகரியங்கள் இருக்கும். மேலும், சக பணியாளர்களுடன் பழகுதலில் பிரச்சனை ஏற்படும். காதலுக்கு உகந்த நாள் அல்ல. தேவையற்ற செலவுகள் ஏற்படும். ஆரோக்கியத்தில் தலைவலி ஏற்பட வாய்ப்புள்ளது.

கும்பம்


கும்ப ராசிக்காரர்களுக்கு சாதகமான நாளாக இருக்கிறது. பணியிடத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். இதனால், பணியிடத்தில் நல்ல பெயர் எடுப்பீர்கள். துணையுடன் அனுசரித்து நடந்துகொள்ள வேண்டும். நிதிநிலை சிறப்பாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

மீனம்


மீன ராசிக்காரர்களுக்கு உகந்த நாளாக இருக்காது. நீங்கள் எதிலும் கவனமாக இருப்பது அவசியம். பணியிடத்தில் உங்களுக்குச் சாதகமான சூழ்நிலை இருக்காது. சக பணியாளர்களுடன் அனுசரித்து நடந்துகொள்ள வேண்டும். கூடுதல் செலவுகள் ஏற்படும். ஆரோக்கியத்தில் கண் மற்றும் பற்களைப் பரிசோதித்துக் கொள்வது நல்லது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *