“அஜித் சார் விருது வாங்கினது பெருமை!” – நடிகை ஷாலினி பேட்டி..!

நேற்றைய தினம், ராஷ்டிரபதி பவனில் குடியரசு தலைவர் திரெளபதி முர்முவிடமிருந்து பத்ம பூஷன் விருதை பெற்றிருந்தார் நடிகர் அஜித். விருது பெறும் தருணத்தில் நடிகை ஷாலினி மற்றும் அஜித்தின் குழந்தைகள் நெகிழ்ச்சியுடன் கைதட்டிய காணொளியும் இணையத்தில் வைரலானது.

விருது பெற்றதும் சில மீடியாக்களை சந்தித்துப் பேட்டியும் கொடுத்திருக்கிறார் அஜித். நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரேஸ் வேளையில் வெளிநாட்டு ஊடகங்களுக்கு பேட்டி அளித்திருந்தார் அஜித். தற்போது இந்திய ஊடங்கங்கள் சிலவற்றைக்குப் பேட்டிக் கொடுத்திருக்கிறார். அங்கு அவர் பேசிய விஷயங்கள் பலவற்றையும் இணையத்தில் வைரலாகி வருகிறது.விருது பெற்றப் பிறகு நடிகர் அஜித் குடும்பத்துடன் சென்னை திரும்பினார்.

 

இந்நிலையில் , அஜித் ஷாலினி குறித்து பேட்டி ஒன்று தந்திருக்கிறார். அதில், தனக்காக ஷாலினி பல தியாகங்கள் செய்து இருப்பதாகவும், அவர் தான் தனது வலிமையின் பில்லர் என அவர் கூறி இருக்கிறார்.நான் எல்லா நேரமும் சரியான முடிவுகளை எடுத்து இல்லை. இருந்தாலும் அவர் கடினமான நேரங்களுக்கு என்னுடன் இருந்து, என்னை discourage செய்யாமல் இருந்தார். நான் சாதித்த அனைத்திற்கும் அவருக்கு தான் credit கொடுக்க வேண்டும் என அஜித் கூறி இருக்கிறார்.

இந்நிலையில், மனைவியும் நடிகையுமான ஷாலினி செய்தியாளர்களிடம் பேசுகையில், ” ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது. இது நல்ல அனுபவமாக இருந்தது. ராஷ்ட்ரபதி பவனில் அஜித் சார் விருது பெற்றதை பார்க்கும்போது ரொம்பவே மகிழ்ச்சியாக இருந்தது. பெருமையான தருணம் இது.” எனக் கூறி விடைபெற்றார்.தற்போது இந்த பதில் ரசிகர்கள் மற்றும் திரையுலகில் வரவேற்பை பெற்று வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *