தமிழக வெற்றிக்கழகத்திற்கு மார்க்கெட்டிங் ஆபிஸரா – அண்ணாமலை பேச்சு

கரூர் சம்பவம் விஜயை தவிர்த்து, மற்ற எல்லோரும் பேசுகிறார்கள், நாங்கள் என்ன தமிழக வெற்றிக்கழகத்திற்கு மார்க்கெட்டிங் ஆபிஸரா என்று மதுரையில் பா.ஜ.க. முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

ஒட்டன்சத்திரம் மற்றும் கரூர் செல்வதற்காக, சென்னையிலிருந்து விமானம் மூலம், பா.ஜ.க. முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை மதுரை வந்தடைந்தார். அப்போது, கரூர் சம்பவம் தொடர்பான நீதிமன்ற விசாரணை குறித்து செய்தியாளர்கள் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், இதை விஜயிடம் கேளுங்கள் என்றும், அவரைத் தவிர மற்ற எல்லோரும் இதைப் பற்றித்தான் பேசுகிறார்கள் என்றும், நாங்க என்ன மார்க்கெட்டிங் ஆபிஸரா தமிழக வெற்றிக்கழகத்திற்கு என்றும் தெரிவித்த அவர், சும்மா எங்களிடமே, சென்னையில், மதுரையில், நொச்சு நொச்சி என்று கேள்வி கேட்கிறீர்கள், நாங்கள் சொல்ல வேண்டிய கருத்துக்கள் எல்லாம் சொல்லிவிட்டோம், நீங்கள் சம்பந்தப்பட்ட நபரிடம் சம்பந்தப்பட்ட கட்சியினரிடம் கேட்க வேண்டும் என்றும் பா.ஜ.க.அண்ணாமலை தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *