
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் 25ஆவது பட்டமளிப்பு விழாவில் ஆளுநரும், பல்கலைக்கழகத்தின் வேந்தருமான ஆர்.என்.ரவி கலந்துகொண்டு மாணவ மாணவியருக்குப் பட்டங்களை வழங்கிச் சிறப்பித்தார்.
சென்னை மாதவரத்தில் உள்ள தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரியில் நடைபெற்றது. இந்தப் பட்டமளிப்பு விழா தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது.
பட்டமளிப்பு விழாவில் மாநில ஆளுநரும் பல்கலைக்கழகத்தின் வேந்தருமான ஆர்.என்.ரவி கலந்துகொண்டு மாணவ மாணவியருக்குப் பட்டங்களை வழங்கிச் சிறப்பித்தார்.
இந்தப் பட்டமளிப்பு விழாவில் தமிழ்நாடு மீன்வளம் மற்றும் கால்நடைப் பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா இராதாகிருஷ்ணன் பங்கேற்கவில்லை.
இதேபோலச் சனவரி 22ஆம் நாள் சென்னைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் பங்கேற்கவில்லை என்பதும் குறிப்பிடத் தக்கது.



