
தமிழகத்தின் 36 வீராங்கனைகள் உட்பட 42 பேர் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான தேசிய கபடி போட்டியில் பங்கேற்க பஞ்சாப் சென்றுள்ளனர்.
போட்டியில் விதிகளை மீறியதாக முறையிட்ட தமிழக வீராங்கனைகள், தமிழக பயிற்சியாளர் பாண்டியன் மீது பஞ்சாப் போட்டியாளர்கள் தாக்குதல் நடத்தினர்.
போட்டியில் ஒருதலைபட்சமாகப் புள்ளிகளை வழங்கியதால் பயிற்சியாளர் என்ற முறையில் தமிழக அணி சார்பில் முறையிட்டபோது தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது.
தமிழக பயிற்சியாளர் தாக்கப்பட்டதுடன் கைதும் செய்யப்பட்டதாகத் தகவல் வெளியானது.
இந்நிலையில் இந்தச் சம்பவம் தொடர்பாகத் தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணைய செயலர் மேக்நாத் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியது,
தமிழக கபடி அணியின் பயிற்சியாளர் பாண்டியன் பஞ்சாப் போலீசாரால் கைது செய்யப்படவில்லை. பயிற்சியாளர் விசாரணைக்கு மட்டுமே அழைத்துச் செல்லப்பட்டார்.
பஞ்சாப் சென்றுள்ள தமிழக கபடி வீராங்கனைகள் பாதுகாப்புடன் உள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.
