புதிதாக விரிவாக்கம் செய்யப்பட்ட விமானநிலையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்!

தூத்துக்குடி மாவட்டத்தில் புதிதாக விரிவாக்கம் செய்யப்பட்ட விமானநிலையத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.
பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக மாலத்தீவிலிருந்து தனி விமானத்தில் தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வந்திறங்கினார். அங்கு அவரை தமிழ்நாடு கவர்னர் ரவி, தூத்துக்குடி கலெக்டர் இளம்பகவத், ஒன்றிய அமைச்சர்கள், தமிழக அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏ உள்பட பலர் வரவேற்றனர்.  பின்னர் 452 கோடி ரூபாய் செலவில் விரிவாக்கம் செய்யப்பட்ட விமான நிலையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தர்.
இந்த விமான நிலையத்தில் தற்போது 2 தனியார் விமான நிறுவனங்கள் மூலம் தினமும் 9 விமான சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றன. பின்னர் தூத்துக்குடி, நெல்லை மாவட்டத்தில்  பல்வேறு திட்டப்பணிகளைப் பிரதமர் மோடி துவக்கிவைத்தார். இதை தொடர்ந்து விமான நிலையத்தில் உருவாக்கப்பட்டுள்ள பல்வேறு வசதிகளைப் பார்வையிட்டு ஆய்வுசெய்தப் பின் தனி விமானம் மூலம் பிரதமர் மோடி திருச்சிக்கு புறப்பட்டுச்சென்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *