அனிருத் இசையில்லாமல் படத்தை இயக்க மாட்டேன் – லோகேஷ் கனகராஜ்

தற்போதைய தமிழ் படங்களில் அதிகமாக இடம் பெற்றிருப்பது அனிருத்தின் இசை தான். அந்த வரிசையில் ஜிவி . பிரகாஷ் , சந்தோஷ் நாராயணன் ஆகியோரும் இடம் பெற்றுள்ளன . இந்நிலையில் , “எதிர்காலத்தில் அனிருத் இசையில்லாமல் எந்த ஒரு படத்தையும் இயக்க மாட்டேன்” என இயக்குநர் லோகேஷ் கனகராஜ் உறுதியாக தெரிவித்துள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கியத்தில் வெளிவந்த ‘கூலி’ திரைப்படம் அண்மையில் திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார் சில தினங்களுக்கு முன்பு வெளிநாட்டிலிருந்து வந்த லோகேஷ் கனகராஜ், மக்களுடன் சேர்ந்து திரையரங்குகளில் படத்தை பார்த்தார். இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி வைரலாகின.

இந்நிலையில் , இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அவர் கலந்துகொண்ட விழாவில் பேசுகையில், “கூலி படம் குறித்து கடந்த 18 மாதங்களாக நான் எதையும் சொல்லாமல் இருந்தேன். மக்கள் அவர்களாகவே யூகித்துக் கொண்டார்கள். ரஜினி படத்தை லோகேஷ் இயக்குகிறார் என்ற மகிழ்ச்சியில் இருந்தார்கள். அதை தடுக்க முடியவில்லை. மேலும், மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு நான் எப்போதும் கதை எழுதுவதில்லை.

நான் எழுதும் கதை மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ற வகையில் இருந்தால் மகிழ்ச்சி. இல்லாவிட்டால், அதனை பூர்த்தி செய்ய முயற்சி செய்வேன். எதிர்காலத்தில் அனிருத் இசையில்லாமல் நான் படம் இயக்க மாட்டேன். ஒருவேளை அவர் சினிமாவிலிருந்து விலகிவிட்டால் தான் மற்றொரு இசையமைப்பாளருடன் பணியாற்றுவது குறித்து யோசிப்பேன்” என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *