தமிழர்களின் வரலாற்றை அழிக்க 365 நாட்களும் வேலை செய்யும் பாஜக.!

தமிழர்களின் வரலாறு, மரபு ஆகியவற்றை அழிப்பதற்காக பாஜக 365 நாட்களும் வேலை செய்து வருவதாக மதுரை மக்களவை உறுப்பினர் வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து மதுரை செல்லூர், தத்தனேரி, அருள்தாஸ்புரம் ஆகிய பகுதிகளில் குடிநீர்த் தொட்டி, உயர்கோபுர மின்விளக்கு ஆகியன அமைக்கப்பட்டுள்ளது.

அவற்றை மக்களவை உறுப்பினர் வெங்கடேசன் தொடக்கி வைத்தார், இந்த நிகழ்ச்சியில் மேயர் இந்திராணி, துணை மேயர் நாகராஜன் ஆகியோர் பங்கேற்றனர்.

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய வெங்கடேசன், தமிழக வரலாற்றை அழித்துப் புராணத்தை நிலைநிறுத்துவதன் மூலம் தமிழர்களின் வரலாறு, தமிழ் மரபு வரலாறு, தமிழர்களின் தனித்துவம் ஆகியவற்றை அழிப்பதற்காக பாஜக 365 நாட்களும் வேலை செய்து வருவதாகக் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *