Elon Musk: எலான் மஸ்கின் வாழ்க்கை வரலாறு திரைப்படம்!

உலகின் மிகப்பெரிய பணக்காரரும், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைவருமான எலான் மஸ்கின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக எடுக்கப்பட உள்ளது. 
ஸ்பேஸ் எக்ஸ், டிவிட்டர் நிறுவனத்தின் உரிமையாளர், டெஸ்லா கார் நிறுவனத்தின் தலைவர் எனப் பல்வேறு நிறுவனங்களுக்குச் சொந்தக்காரரான எலான் மஸ்க் எப்பொழுதும் உலகளவில் டிரெண்டாகக்கூடிய பிரபலமாக வலம் வருபவர். அண்மையில் டிவிட்டர் நிறுவனத்தை வாங்கிய எலான் மஸ்க் புளூட் டி, டிவிட்டர் பெயரை எக்ஸ் என மாற்றி அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்தார்.
தென்னாப்பிக்காவில் சாதாரன ஏழை குடும்பத்தில் பிறந்த இவர் உலகளவில் அனைவருக்கும் பரீட்சியமான மிகப்பெரிய பணக்காரரான தன்னை உயர்த்தின் கொண்டார். ஆரம்பத்திலிருந்து இதுவரை ஒவ்வொரு முறையும் பல தோல்விகளைச் சந்தித்த எலான் மஸ்க், விண்ணை தாண்டு ஆய்வு செய்யும் அளவுக்கு உயர்ந்துள்ளார். பெரும் முதலாளிகளுக்கு முதலாளியாகச் சிகரம் தொட்டுள்ளார். எவ்வளவு தான் உயரத்தில் சென்றாலும் எலான் மஸ்கின் சில செயல்கள் அவரை விமர்சனத்திற்கு ஆளாக்கியுள்ளது.
தோல்வி, வெற்றி, சர்ச்சை, புகழ் என மொத்தமாகத் தன்னை பேச வைத்துள்ள எலான் மஸ்கின் கதையைப் பிரபல அமெக்க எழுத்தாளர் வால்டர் ஐசக்சன் புத்தகமாக எழுதியுள்ளார். அந்தப் புத்தத்தில் எலான் மஸ்கின் சிறுவயது வலிகள் முதல் தற்போதுள்ள வெற்றிவரை முக்கியமான நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன. உலகளவில் கவனத்தை ஈர்த்துள்ள இந்தப் புத்தகத்தைத் திரைப்படமாக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.
எலான் மஸ்க் புத்தகத்தை வைத்து அவரது வாழக்கை திரைப்படத்தைப் பிரபல அமெரிக்க திரைப்பட இயக்குநர் டேரன் அரோனோபிஸ்கி இயக்க உள்ளார். இதை ஏ24 என்ற தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. டேரன் அரோனோபிஸ்கி தி வேல், மதர், பை(Pi) உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கு பேசப்படும் இயக்குநராக உள்ளார்.  தொழிலிலும், சமூக வலைதளங்களிலும் மட்டும் ஹீரோவாகப் பார்க்கப்பட்டு வந்த எலான் மஸ்க் தற்போது திரையிலும் ஹீரோவாக வர உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *