பாஜக வேட்பாளர் பட்டியல் குறித்து பியூஷ் கோயல்..! சொன்னது என்ன தெரியுமா..?

Advertisements

தமிழ்நாடு பாஜக தேர்தல் மேலிட பொறுப்பாளருமான பியூஷ் கோயல் இன்று சென்னை வந்த நிலையில் , விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார் ..

அப்போது நிருபர்கள் கேட்ட பல்வேறு அரசியல் கேள்விகளுக்கு பதிலளித்தார். மேலும் அவர் , “தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு, பெண்கள் பாதுகாப்பு உள்ளிட்டவை சீர்கெட்டுள்ளன.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கொடுத்த நல்ல அரசு நிர்வாகமே தமிழ்நாட்டு மக்களுக்கு தேவை.எடப்பாடி பழனிசாமி தலைமையிலான என்.டி.ஏ. கூட்டணி இந்தத் தேர்தலில் பெரும் வெற்றி பெற்று, நல்ல அரசு நிர்வாகத்தை மீண்டும் கொண்டுவரும்.

தமிழ்நாடு மக்களுக்கு மாற்றம் தேவை. அந்த மாற்றத்தை என்.டி.ஏ. வழங்கும். வேட்புமனு தாக்கலுக்கு அவகாசம் உள்ள இறுதி நாள் வரை வேட்புமனுக்களை தாக்கல் செய்யலாம்.

எங்கள் கட்சியில் வேட்பாளர் தேர்வில் எந்த காலத்தாமதமும் இல்லை. இன்று வேட்பாளர்கள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளவே தமிழ்நாடு வந்துள்ளேன்.

இங்கிருக்கும் தலைவர்களுடன் ஆலோசனை நடத்திவருகிறோம். இன்னும் இரண்டு நாளில் வேட்பாளர்கள் பட்டியல் தயார் செய்யப்பட்டு, வெளியிடப்படும் என்று அவர் கூறினார்..

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *