
பூந்தமல்லி தொகுதி தவெக வேட்பாளர் மீது பெண் நிர்வாகி கொடுத்த பாலியல் புகாரில் 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பூந்தமல்லி தொகுதியில் போட்டியிடும் பிரகாசம் என்பவர் மீது, அதே கட்சியை சேர்ந்த பெண் நிர்வாகி பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
கணவருடன் வந்து சம்பந்தப்பட்ட பெண் எஸ்.பி., அலுவலகத்தில் புகார் கொடுத்த நிலையில், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக நேரம் பார்த்து பொய் புகார் அளித்துள்ளதாக பிரகாசம் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும் , எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் பூந்தமல்லி தனித் தொகுதியில் தவெக சார்பில் இவர் போட்டியிடுகிறார்.
இந்த நிலையில் தவெக பெண் நிர்வாகி ஒருவர், பிரகாசம் மீது பாலியல் புகார் கொடுத்துள்ளார் .கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு திருவள்ளூரில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றுள்ளது. அந்த நிகழ்ச்சியில் தவெக மாநில பொதுச் செயலாளர் ஆனந்த் மற்றும் திருவள்ளூர் தெற்கு மாவட்ட செயலாளர் பிரகாசம் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.
அப்போது, தவெக மகளிர் அணி நிர்வாகி ஒருவருக்கு பிரகாசம் பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும், இது தொடர்பாக போலீசார் இரு தரப்பினரிடையே விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால், பரப்புரைக்கு ஆயத்தமான வேட்பாளர், தன்மீதான புகார் காரணமாக காவல் நிலையத்துக்குச் செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.



