
சென்னை:
தமிழகத்தில் ஆன்லைனில் பணம் கட்டி விளையாடும் விளையாட்டுகளை விளையாடச் சிறுவர்களுக்குக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி நசிமுதீன் தலைமையிலான ஆன்லைன் கேமிங் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பது,
ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குப்படுத்துவதற்காகச் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
18 வயதுக்குள்பட்டவர்களுக்கு ஆன்லைனில் பணம் கட்டி விளையாடத் தடை விதிக்கப்படுகிறது.
நள்ளிரவு முதல் அதிகாலை 5 மணிவரை ஆன்லைன் கேமில் பயனர்களை அனுமதிக்கக் கூடாது.
பணம் கட்டும் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு ஆதார் சரிபார்ப்பு கட்டாயமாக்கப்பட வேண்டும்.
ஒவ்வொரு 30 நிமிடங்களுக்கு ஒரு முறையும் எச்சரிக்கை செய்தியைப் பயனர்களுக்கு அனுப்ப வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.
