
நடிகர் அஜித் குமார் துபாயில் நடைபெற்ற கார் பந்தயத்தில் மூன்றாவது இடம் பிடித்தார். போர்ச்சுக்கல் எஸ்டோரில் நகரில் நடைபெறும் பந்தயத்திற்காகத் தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.
அண்மையில் துபாயில் நடைபெற்ற கார் பந்தயத்தில் அஜித்குமாரின் ரேசிங் அணி மூன்றாவது இடம்பிடித்து அசத்தியது.
அதைத்தொடர்ந்து போர்ச்சுக்கல் நாட்டில் எஸ்டோரில் நகரில் நடைபெறும் கார் பந்தயத்தில் அஜித்குமார் பங்கேற்றுள்ளார்.
இதற்காக அஜித் குமார் தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில், ரேஸ் பயிற்சியின்போது தனியார் தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்த அஜித், “இந்தக் கார் பந்தயத்தில் பங்கேற்பது பெருமையளிப்பதாக” கூறினார்.
“இன்றைய பயிற்சியின்போது கூடச் சிறு விபத்து ஏற்பட்டது” தனது குழுவினர் விரைந்து செயல்பட்டதால் எந்தப் பாதிப்புமின்றி பயிற்சியைத் தொடர்கிறேன்” என்றும் கூறினார்.
தனது ரசிகர்கள் மட்டுமின்றி தான் என்ன செய்கிறேன் என்பதை அறிய விரும்பும் அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் அஜித்குமார் தெரிவித்தார். கார் ரேஸ் பயிற்சியின்போது ரசிகர்களுடன் அஜித்குமார் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
