
ஆத்தாடி என்னா பெரிய பங்களா. வாயைபிளக்கும்ரசிகர்கள்.

பாகுபலியில் பிரபாசுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் இந்திய அளவில் தமன்னா பிரபலம் அடைந்தார்.தெலுங்கிலும் ஏராளமான வெற்றிப் படங்களில், முன்னணி கதாநாயகர்களுடன் இணைந்து நடித்துள்ளார் தமன்னா. இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் மொழி படங்களிலும் தமன்னா தொடர்ந்து நடித்துள்ளார்.

அண்மையில் இவர் நடித்த ஜீக்கர்டா என்ற வெப் தொடர் வெளியானது. இதைத் தொடர்ந்து தமன்னா நடிப்பில் உருவாகியுள்ள லஸ்ட் ஸ்டோரீஸ் வெப் தொடரும் அண்மையில் வெளியாகிக் கலவையான விமர்சனம் பெற்றது.இந்நிலையில் கடந்த மாதம் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது. இந்தப் படத்தில் நடிகை தமன்னாவும நடித்திருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து தற்போது மும்பையில் உள்ள நடிகை தமன்னாவின் ஆடம்பர வீட்டின் புகைப்படங்களும், வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது.



