Mobile phone: செல்போனை பாதுகாக்கும் கவலை தேவையில்லை!

ஏர்பேக் உடன் போன் கேஷ் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது.

என்ன தான் கவனமாக இருந்தாலும் செல்போன் கீழே விழுவதை தவிர்க்க முடியாது. வீட்டில் குழந்தைகள் எடுத்து விளையாடும்போது செல்போன் கீழே விழுந்து உடைகிறது. ஃபோனை வாங்கும்போது, அதைப் பாதுகாக்க டெம்பர்டு கிளாஸ் மற்றும் ஃபோன் கேஸ் போடுகிறோம். அப்படி இருந்தும் செல்போன் உடையாமல் இருப்பதில்லை.

இந்நிலையில், இன்ஸடாவில் ஏர்பேக் உடன் போன் கேஷ் தொடர்பான வீடியோ லைக்குகளை அள்ளிக் குவித்து வருகிறது. கார் விபத்தின்போது எவ்வாறு பலூன் விரிந்து முகத்தை மூடி ஓட்டுநர் மற்றும் இருக்கையில் அமர்ந்துள்ளவர்களை பாதுகாக்குமோ அதே போல், செல்போன் கீழே விழும்போது பலூன் விரிந்து அதனைப் பாதுகாக்கிறது. இந்த வீடியோவைச் சுமார் 55 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *