
இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் அண்மையில் விவாகரத்து அறிவிப்பை வெளியிட்டது போல் நடிகை நமீதாவும் தன் காதல் கணவரைப் பிரிய உள்ளதாகத் தகவல் பரவிப் பரபரப்பை ஏற்படுத்தியது.
விஜயகாந்தின் எங்கள் அண்ணா படம்மூலம் நடிகையாக அறிமுகமானவர் நமீதா. இதையடுத்து விஜய், அஜித் உள்பட பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்களில் தாறுமாறான கவர்ச்சி வேடங்களில் நடித்துக் கோலிவுட்டின் ஹாட் குயினாக வலம் வந்தார் நமீதா. இவருக்கேன தனி ரசிகர் பட்டாளமே இருந்து வந்தனர். குறுகிய காலத்தில் உச்ச நடிகையாக உயர்ந்த நமீதா, ஒருகட்டத்தில் உடல் எடை அதிகரித்ததால் சினிமாவில் பட வாய்ப்புகளை இழக்க தொடங்கினார்.
பட வாய்ப்புகள் குறைந்ததை அடுத்து ரியாலிட்டி ஷோக்களில் நடுவராகப் பங்கெடுத்து வந்த இவர், கடந்த 2017-ம் ஆண்டு வீரேந்திர செளத்ரி என்பவரைக் காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த ஜோடிக்குக் கடந்த 2022-ம் ஆண்டு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தது. தற்போது அரசியலில் பிசியாக உள்ள நமீதா, பாஜக கட்சியில் பணியாற்றி வருகிறார். அண்மையில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலிலும் அக்கட்சிக்காகப் பிரச்சாரம் மேற்கொண்டார்.
இதனிடையே நடிகை நமீதாவுக்கும் அவரது கணவர் வீரேந்திர செளத்ரிக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் அவர்கள் இருவரும் விவாகரத்து செய்து பிரிய உள்ளதாகச் செய்திகள் உலா வந்தன. அண்மையில் ஜிவி பிரகாஷ் விவாகரத்து செய்தி வெளியாகிக் கோலிவுட்டில் புயலை கிளப்பிய நிலையில், நமீதாவின் விவாகரத்து செய்தியும் காட்டுத் தீப்போல் பரவத் தொடங்கியது. இதுகுறித்து மெளனம் காத்து வந்த நமீதா தற்போது அதுகுறித்த உண்மையைப் போட்டுடைத்துள்ளார்.
அதன்படி, எங்களைப் பற்றிய விவாகரத்து வதந்தி வெளியாவதற்கு சில தினங்களுக்கு முன்னர் தான் என் கணவருடன் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு இருந்தேன். ஆனாலும் நாங்கள் விவாகரத்து பெற்றுவிட்டதாக வதந்தி பரவி வருகிறது. எதன் அடிப்படையில் இது போன்ற செய்திகளை வெளியிடுகிறார்கள் என்று புரியவில்லை. நடிகையான பின்னர் நிறைய வதந்திகளைப் பார்த்துவிட்டதால், நானும் என் கணவரும் இந்த விவாகரத்து வதந்தியைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவிலை” என நமீதா கூறி இருக்கிறார்.


