ரசிகர்களுக்கு ஸ்பெஷல் கிப்ட்..!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிகாரப்பூர்வ லக்கேஜ் பார்ட்னராக தனியார் நிறுவனம் இணைந்துள்ளது.

சென்னை அண்ணா சாலை நட்சத்திர விடுதியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிகாரப்பூர்வ லக்கேஜ் பார்ட்னராக தனியார் நிறுவனம் இணைந்தது. இதில், அந்நிறுவனம் சிஎஸ்கே அணி மற்றும் அவர்களின் ரசிகர்களுக்கு சிறப்பு பைகளை வெளியிட்டுள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாக இயக்குனர் விஸ்வநாதன் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசியபோது,  சிஎஸ்கே அணியில் அதிகாரப்பூர்வ லக்கேஜ் பார்ட்னராக வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சியடைவதாகத் தெரிவித்தார். சிஎஸ்கே  மீதான அன்பைக் கொண்டாட தங்கள் ரசிகர்களுக்கு இப்போது ஒரு மேலும் ஒரு வழியை  வழங்கியுள்ளதாகக் கூறினார்.
இந்த கூட்டணியானது, தங்கள் ரசிகர்களுக்கான அனுபவத்தை மேலும் அதிகரிக்குமென்று நம்புகிறோம் என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *