நடிகருக்குக் கன்னத்தில் முத்தம் கொடுத்த நடிகை ஸ்வாதி ரெட்டி…
பட நிகழ்ச்சி ஒன்றில் பிரபல நடிகை ஸ்வாதி ரெட்டி நடிகருக்கு முத்தம் கொடுத்த சம்பவம் தெலுங்கு சினிமாவில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
தமிழில் சுப்பிரமணியபுரம் படம்மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகைசுவாதி. அதன் பின்னர் சசிகுமார் நடித்த போராளி, கிருஷ்ணா நடித்த யாக்கை, ஜெய் நடித்த வடகறி, விஜய் சேதுபதி நடித்த இதற்குத் தானா ஆசைப்பட்டாய் பாலகுமாரா உள்ளிட்ட சில படங்களில் நடிகை சுவாதி நடித்துள்ளார். அதன்பின் பெரிதாகப் பட வாய்ப்பு இல்லாமல் இருந்து வருகிறார். இதற்கிடையில் விமான பைலட் விகாஸ் என்பவரைக் கடந்த 2022 ஆம் ஆண்டுத் திருமணம் செய்துக் கொண்ட நிலையில் சுவாதி படங்களில் நடிப்பதை நிறுத்தி விட்டார்.
அதேசமயம் இந்தோனேசியாவில் செட்டில் ஆன அவர் தொடர்ந்து சமூக வலைத்தளத்தில் ஆக்டிவ் ஆக இருக்கிறார். அடிக்கடி தனது கணவருடன் எடுத்த புகைப்படங்களை எடுத்துப் பதிவிட்டு வந்த சுவாதி, சில மாதங்களுக்கு முன் அதனை நீக்கினார். இதனால் இருவருக்கும் இடையே மணமுறிவு ஏற்பட்டதா என்றெல்லாம் ரசிகர்கள் பலரும் கேள்வியெழுப்பினர். இப்படியான நிலையில், நீண்ட இடைவெளிக்குப் பின் சுவாதி சினிமாவில் மீண்டும் ரீஎன்ட்ரியாகி உள்ளார்.
தற்போது அவர் ‘மந்த் ஆஃப் மது’ என்கிற படத்தில் நடித்துள்ளார். ஸ்ரீகாந்த் நாகோடி இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படத்தில், நவீன் சந்திரா, ஸ்ரேயா நவிலே உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டுவிழா நேற்று நடைபெற்றது.
நீண்ட இடைவெளிக்குப் பின் சுவாதி சினிமாவில் மீண்டும் ரீஎன்ட்ரியாகி உள்ளார். தற்போது அவர் ‘மந்த் ஆஃப் மது’ என்கிற படத்தில் நடித்துள்ளார். ஸ்ரீகாந்த் நாகோடி இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படத்தில், நவீன் சந்திரா, ஸ்ரேயா நவிலே உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டுவிழா நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நடிகர் சாய் தரம் தேஜ் கலந்து கொண்டார்.
அப்போது பேசிய அவர், “கல்லூரி நாட்களில் இருந்தே சுவாதி தன்னுடைய சிறந்த தோழி. இந்தப் படம் சுவாதிக்கு நல்ல வெற்றியைக் கொடுக்க வேண்டும். ஆல் தி பெஸ்ட் எனப் புகழ்ந்து வாழ்த்து தெரிவித்தார். இதைக் கேட்டுக்கொண்டிருந்த சுவாதி திடீரென அவரைக் கட்டிப்பிடித்து மேடையிலேயே கன்னத்தில் முத்தம் கொடுத்துத் தன் அன்பை வெளிப்படுத்தினார். சுவாதியின் இந்தச் செயல் அங்கிருந்தவர்களை சற்று அதிர்ச்சி அடையச் செய்தது. இதன் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
Supreme Hero #SaiDharamTej cherishes his friendship with #SwathiReddy from their college days at #MonthOfMadhu trailer launch event!!🤗♥️@IamSaiDharamTej #ColorsSwathi #TFNReels #TeluguFilmNagar pic.twitter.com/kcfDI5WpSq
— Telugu FilmNagar (@telugufilmnagar) September 26, 2023
