Beauty tip: முகத்தைப் பளபளப்பாக வைத்துக்கொள்ள இந்தக் கடலை மாவு மட்டும் போதும்..!

Advertisements

காலம் காலமாகப் பெண்களின் அழகை அதிகரிக்க பயன்படுத்தக்கூடிய மிக எளிமையான பொருள் தான் இந்தக் கடலைமாவு. இந்தக் கடலை மாவை வைத்து உடல் முழுவதும் இயற்கையான முறையில் அழகை பெற முடியும். கடலை மாவை பிறந்த குழந்தை முதல் பெரியவர்கள்வரை பயன்படுத்தலாம்.

சருமத்தில் முகப்பரு:

இந்தக்காலத்தில், 90% மனிதர்களுக்கு முகப்பரு மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது. அந்த முகப்பருவை கட்டுப்படுத்த, சிறியவர்கள் முதல் பெரியவர்கள்வரை யாரும் இயற்கை பொருள்களைப் பயன்படுத்துவதில்லை. அனைவரும் செயற்கையை நோக்கி ஓடிக் கொண்டு இருக்கும் இக்காலத்தில் நாம் முன்னோர்கள் பயன்படுத்தப்பட்ட கடலை மாவை யாரும் பயன்படுத்தாமல் இருப்பதால், முகப்பரு போன்ற சரும பிரச்சனைகள் ஏற்படுகிறது.

முகப்பரு நீங்குவதற்கு கடலைமாவு ஃபேஸ் பேக் எப்படி பயன்படுத்துவது :
உங்கள் சருமத்தில் இருக்கும் பருக்கள் நீங்க இது ஒரு சிறந்த வழியாகக் கருத்தில்கொள்ளலாம். அதாவது,

* ஒரு சின்னக் கின்னத்தில்,ஒரு தேக்கரண்டி கடலை மாவு மற்றும் இரண்டு தேக்கரண்டி கிரீன் டீ இரண்டையும் சேர்த்து ஒரு பேஸ்ட்டாகக் கலந்து கொள்ளவும்.இந்தக் கலவையைச் சருமத்தில் தடவி நன்றாக மசாஜ் செய்யவும்.
* பின்னர்,10 நிமிடங்கள் அப்படியே வைத்திருக்கவும். பின்பு, வெதுவெதுப்பான நீரில் சருமத்தை கழுவ வேண்டும்.
* வாரத்தில் இரண்டு முறை இப்படி செய்துவருவதால் சருமத்தில் உள்ள பருக்கள் அனைத்தும் மறைந்து விடும்.

வறண்ட சருமத்திற்கு கடலை மாவு :

சிலருக்கு சருமம் எப்போதும் வறண்டு காணப்படும் மற்றும் தினமும் தண்ணீர் அதிகமாகவும், உடலுக்குத் தேவையான தண்ணீரை குடிக்காததால், சருமம் வறண்டு போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது, இந்தப் பிரச்சனையைக்கு தீர்வாக ஒரு கடலைமாவு ஃபேஸ் பேக்.
எப்படி பயன்படுத்தலாம்;
* கடலை மாவை கற்றாழை ஜெல்லில் சேர்த்து பேஸ்ட் போல் செய்துக்கொள்ள வேண்டும்.
* பின், அதை முகத்தில் தடவி 10-15 நிமிடம்வரை நன்கு காய வைத்து, முகத்தை நீரில் கழுவுங்கள்.
* இப்படி இந்தச் செய்முறையை வாரம் ஒருமுறை செய்து வந்தால், சருமம் வறட்சியடையாமல், ஈரச்சத்துடன் இருக்கும்.

எண்ணெய்ப்பசை சருமத்திற்கு கடலை மாவு:

சிலருக்கு எப்பொழுதும் சருமத்தில் எண்ணெய்ப்பசையாக இருக்கும்.அவ்வாறு, எண்ணெய்ப்பசையை கட்டுப்படுத்த கடலைமாவு ஃபேஸ் பேக்கை பயன்படுத்தலாம்.
* கடலை மாவை சீமைச்சாமந்தி டீச்சேர்த்து பேஸ்ட் போன்று செய்துகொள்ளவும்.
* முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி சில நிமிடங்கள் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரால் முகத்தை
கழுவ வேண்டும்.
* இவை, வாரம் ஒருமுறை பயன்படுத்தி வந்தால், சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய்ப்பசை நீங்கி, எப்போதும் சருமம் பொலிவோடு இருக்கும்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *