Surya 45 : சூர்யா 45 கதை இதுதான்… கோடம்பாக்கத்தில் பரபரப்பு !

Advertisements
சூர்யா 45 கதை இதுதான்… கோடம்பாக்கத்தில் பரபரப்பு
தமிழ் ரசிகர்களின் நெஞ்சத்தில் தனக்கெனத் தனி இடம் பிடித்தவர் நடிகர் சூர்யா. சமீபத்தில் இவர் நடித்துக் கங்குவா ரெட்ரோ ஆகிய இரண்டு படங்கள் வெளிவந்தன இந்த இரண்டு படங்களில் கங்குவா படம் மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டு முடிவில் தோல்வியைத் தழுவியது ரெட்ரோ படம் கலவையான விமர்சனத்தைப் பெற்றது
இந்த நிலையில் தற்போது ஆர் ஜேப்பாலாஜி இயக்கத்தில் சூர்யா தனது 45 வது திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்தப் படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் முடிவடைந்து விட்டன இந்தப் படத்திற்கு இன்னும் தலைப்பு தயாராகவில்லை என்றாலும் கருப்பு எனப் பெயர் வைப்பார்கள் எனத் தெரியவந்துள்ளது இதற்கான அறிவிப்பு வருகிற 20-ஆம் தேதி ஆர் ஜேப்பாலாஜியின் பிறந்தநாளன்று வெளியாகிறது அதேபோல் அடுத்த மாதம் ஜூலை 23ஆம் தேதி சூர்யாவின் பிறந்தநாளில் இந்தப் படத்தின் டீசர் வெளியாகிறது
சூர்யா 45 படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாகத் திரிஷா நடித்திருக்கிறார். மேலும் யோகி பாபு மன்சூர் அலிகான் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்
இந்தப் படத்தில் சூர்யாவுக்கு வில்லனாக ஆர்.ஜேப்பாலாஜி நடித்திருப்பதாகச் சொல்லப்படுகிறது
இதற்கிடையே சூர்யா 45 படத்தின் கதைக் கரு வெளியே கசிந்துள்ளது இந்தப் படத்தில் சூர்யா இரண்டு வேடங்களில் நடித்திருக்கிறார் என்றும் ஒருவர் சாமியாராகவும் ஒருவர் மனிதனாகவும் நடிப்பதாகச் சொல்லப்பட்டது ஆனால் தற்பொழுது அவர் கடவுளால் அனுப்பப்பட்ட வழக்கறிஞராக நடித்துள்ளார் என்பது தெரிய வந்துள்ளது அதாவது கடவுளாகப் பட்டவர் வழக்கறிஞர் அவதாரம் எடுத்துத் தர்மத்தை நிலை நாட்டுவது என்பதுதான் சூரியா 45 படத்தின் கதை என்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது
சூரியா 45 படக்கதை வெளிவந்துள்ள நிலையில் இந்தப் படம்குறித்து ரசிகர்களின் எதிர்பார்ப்பு எகிறி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது
Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *