சூர்யா 46 படத்தின் டைட்டில் வெளியானது.! குஷியில் ரசிகர்கள்..

Advertisements

பிரபல நடிகர் சூர்யாவின் 46 ஆவது திரைப்படத்திற்கு “விஸ்வநாத் அன்ட் சன்ஸ்” எனப் பெயரிடப்பட்டு அதன் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

பிரபல நடிகர் சூர்யாவின் 46 ஆவது திரைப்படத்திற்கு “விஸ்வநாத் அன்ட் சன்ஸ்” எனப் பெயரிடப்பட்டுள்ளது. இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இதில், மமிதா பைஜூ, ரவீனா டான்டன், பவானி ஸ்ரீ, ராதிகா சரத்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இதையடுத்து, 2005 ஆம் ஆண்டு சூர்யா நடிப்பில் வெளியான கஜினி படத்தின் சஞ்சய் ராமசாமி கதாபாத்திரம் போன்றே “விஸ்வநாத் அன்ட் சன்ஸ்” படத்தில் நடிகர் சூர்யாவின் கதாபாத்திரம் இருக்கும் என்று இயக்குநர் வெங்கி அட்லூரி தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து, வருகின்ற ஜூலை மாதம் இந்தப் படம் வெளியாகும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, “விஸ்வநாத் அன்ட் சன்ஸ்” படத்தின் போஸ்டர் சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ள நிலையில் அதில் நடிகர் சூர்யா குழந்தையுடன் உள்ள புகைப்படம் அவரது ரசிகர்களிடையே இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *