சூர்யா நடித்துள்ள ‘சீன்’ திரைப்படம் வெளியீடு : ரசிகர்கள் பட்டாசு வெடித்துக் கொண்டாட்டம்.!

நடிகர் சூர்யா நடித்துள்ள ‘சீன்’ திரைப்படம் வெளியானதை முன்னிட்டு, கோவையில் தெற்கு மாவட்ட தலைமை சூர்யா நற்பணி இயக்கத்தின் சார்பில் திரையரங்கம் முன்பாக ரசிகர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

நடிகர் சூர்யா நடித்துள்ள ‘சீன்’ திரைப்படம் வெளியானதை முன்னிட்டு, கோவையில் தெற்கு மாவட்ட தலைமை சூர்யா நற்பணி இயக்கத்தின் தலைவர்  சதீஷ்குமார் தலைமையில் திரையரங்கம் முன்பாக மேளதாளங்கள் முழங்க, கேக் வெட்டி, பட்டாசுகள் வெடித்து ரசிகர்கள் உற்சாகமாகக் கொண்டாடினர்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு காலை 6 மணிக்கே முதல் காட்சி திரையிட அனுமதி வழங்கிய தமிழக அரசுக்கு சூர்யா நற்பணி இயக்கத்தினர் தங்களது நன்றியைத் தெரிவித்தனர்.

இந்நிகழ்வில், நகர, ஒன்றிய, பகுதி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *