சூப்பர் எல் நினோ குறித்து ஐக்கிய நாடுகள் அமைப்பு எச்சரித்துள்ள நிலையில், உலக நாடுகள் அதன் தாக்கத்தை எதிர்கொள்ளத் தயாராகி வருகின்றன.
புதைபடிவ எரிபொருட்களால் கரிப்புகை வெளியீட்டால் புவி வெப்பமயமாதல் அதிகரித்து சூப்பர் எல் நினோ எனப்படும் பருவ நிலை மாற்றம் ஏற்பட்டுள்ளதாக வானிலை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் திபெத்தில் இமயமலையில் பனிப்பாறைகள் உருகிச் சாயந்ததில் நேபாளத்தின் போதேகோசி ஆற்றில் திடீர்ப்பெருவெள்ளம் பாய்ந்து பேரழிவை ஏற்படுத்தியுள்ளது.
இதில் ஆயிரத்து இருநூற்றுக்கு மேற்பட்டோர் உயிரிழந்தனர். நாலாயிரத்துக்கு மேற்பட்டோரைக் காணவில்லை. இதேபோல் சூப்பர் எல் நினோவின் தாக்கத்தால் இந்த ஆண்டில் தென்மேற்குப் பருவமழைப் பொழிவு குறைந்துள்ளது.
இந்நிலையில் ஐக்கிய நாடுகள் அவையின் பொதுச்செயலாளர் அன்டானியோ குட்டரஸ் விடுத்துள்ள எச்சரிக்கையில், மிகக் கடுமையான காலநிலையின் அபாயக் கட்டத்துள் உலகம் நுழைந்துள்ளதாகவும், எல் நினோவின் தாக்கல் உலக நாடுகளில் தொடங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
உலக வானிலை அமைப்பு வெளியிட்டுள்ள அண்மைக்காலத் தரவுகளில், கடந்த 70 ஆண்டுகளில் இல்லா வகையில் வானிலையின் வெயில், வறட்சி, புயல், மழை, பனிப்பாறை உருகுதல் ஆகிய தாக்கங்கள் 2027ஆம் ஆண்டு பிப்ரவரி வரை நீடிக்கும் என்று தெரிவித்துள்ளது.
எல் நினோவின் தாக்கத்தால் சில பகுதிகளில் கடும் வறட்சி நிலவும் அதே நேரத்தில் மற்ற பகுதிகளில் வலிமையான புயல் மழையும் வெள்ளப்பெருக்கும் ஏற்படும் என எச்சரித்துள்ளது.


