சண்டே ஸ்பெஷல் – இந்த ஸ்டைல்ல சிக்கன் செய்து பாருங்க!

Advertisements

இந்தச் சிக்கன் மிளகாய் பிரட்டல், செய்வதற்கு சுலபமாக இருப்பதோடு, மிகவும் சுவையாகவும் இருக்கும்.

பொதுமக்கள் கண்டிப்பாக வாரத்தில் ஒரு நாளாவது அசைவ உணவைச் சாப்பிடாமல் இருக்க மாட்டார்கள். அதிலும் ஒரு சிலர்கள் வாரத்தில் ஏழு நாட்களும் அசைவத்தை உணவில் சேர்த்துக் கொள்வார்கள்.

பொதுமக்கள் பலரும் விரும்பிச் சாப்பிடும் அசைவத்தில் ஒன்றாகச் சிக்கன் ரெசிபி இடம் பிடித்துள்ளது. இதனைப் பொதுமக்களுக்குப் பிடித்த மாதிரி செஞ்சு கொடுத்தா வீட்டில் உள்ளவர்கள் அனைவருமே விரும்பி வாங்கி சாப்பிடுவார்கள்.

சிக்கன் ரெசிப்பில எத்தனையோ விதம் இருக்கிறது. அதுல சிக்கன் மிளகாய் பிரட்டலை செய்யுங்கள். இந்தச் சிக்கன் மிளகாய் பிரட்டல், செய்வதற்கு சுலபமாக இருப்பதோடு, மிகவும் சுவையாகவும் இருக்கும்.

மேலும் இப்படி சிக்கனை செய்தால், சாம்பார் சாதம், ரசம் சாத்துடன் சேர்த்து சாப்பிடலாம்.

சுவையான சிக்கன் மிளகாய் பிரட்டலை எப்படி செய்யலாம்னு உங்களுக்கான எளிய செய்முறை…

தேவையான பொருட்கள்:

நல்லெண்ணெய் – 2தேக்கரண்டி

சிக்கன் – 1/2 கிலோ

கறிவேப்பிலை – 1 கொத்து

உப்பு – சுவைக்கேற்ப

மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி

சின்ன வெங்காயம் – 25

வரமிளகாய் – 10

செய்முறை:

முதலில் சிக்கனை நன்கு கழுவிக் கொள்ள வேண்டும். பின்னர் மிக்சர் ஜாரில் சின்ன வெங்காயம் மற்றும் வரமிளகாய் சேர்த்து சற்று கொரகொரவென்று அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு ஒரு கடாயில், நல்லெண்ணெய் ஊற்றிச் சூடானதும், கழுவி வைத்துள்ள சிக்கனை சேர்த்து, கறிவேப்பிலை தூவி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.

பிறகு அதில் அரைத்து வைத்துள்ள வெங்காயம் மற்றும் வரமிளகாய் விழுதைச் சேர்த்து கிளறி விட வேண்டும்.பின் சிக்கனில் நீர் சேர்க்காமல், குறைவான தீயில் வைத்து, மூடி வைத்து, சிக்கனை 15 நிமிடம் வேக வைக்க வேண்டும்.

15 நிமிடம் கழித்து, மூடியைத் திறந்து, சிக்கனை கிளறி இறக்கினால், சுவையான சிக்கன் மிளகாய் பிரட்டல் தயார்.

இதனை அப்படியே சாம்பார் சாதம், ரசம் சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால் சுவை அட்டகாசமாக இருக்கும்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *