12 டன் தங்கம் + 16 டன் வெள்ளி..! வியட்நாமுக்கு அடித்த பெரிய ஜாக்பாட்..!

Advertisements

சீனாவின் அண்டை நாடாக உள்ள வியட்நாமுக்கு பெரிய ஜாக்பாட் அடித்துள்ளது.அதாவது அந்த நாட்டில் சுமார் 25 ஆயிரம் கிலோ தங்கம் இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. இப்படியான சூழலில் தான் 12 சுரங்கங்களில் பூமிக்கடியில் 10 டன் தங்கம் மற்றும் 16 டன் வெள்ளி புதைந்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது வியட்நாமுக்கு பெரும் ஜாக்பாட்டாக உள்ளது. வியட்நாமில் மொத்தம் 10 கோடி மக்கள் தான் வசித்து வருகின்றனர். ஆனாலும் வியட்நாம் தங்கம் நிறைந்த நாடாக அறியப்படுகிறது.தற்போது தங்கம் விலை தொடர்ந்து உச்சம் தொட்டு வருகிறது. ஆனால் அப்படியொரு சம்பவம் தான் வியட்நாமில் நடந்துள்ளது. வியட்நாமை எடுத்து கொண்டால் அது புதையல் தேசமாக கருதப்படுகிறது. அந்த நாட்டில் தங்கம் உள்பட பல கனிமங்கள் புதைந்து இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வியட்நாமில் மொத்தம் 25 ஆயிரம் கிலோ தங்கம் என்பது உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் மொத்தம் 500க்கும் அதிகமான இடங்களில் தங்க தாதுக்கள் தொடர்பான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனை அந்த நாட்டின் இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் உறுதி செய்துள்ளது.இந்நிலையில் தான் தற்போது வியட்நாமில் பூமிக்கடியில் தங்கம் நிறைந்திருக்கும் இடங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அதன்படி அந்த நாட்டின் இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் சார்பில் முக்கிய தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் 12 புதிய சுரங்கங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த புதிய சுரங்கங்களில் 10 டன்களுக்கு மேலாக தங்கமும், 16 டன் வெள்ளியும் புதைந்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 32 இடங்களில் ஆய்வு மேற்கொண்டதில் 12 சுரங்கங்களில் தங்கம், வெள்ளி புதைந்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது வியட்நாமின் பொருளாதாரத்தில் பெரும் பங்கை வகித்து வருகிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.மேலும், 500 இடங்களில் தங்கம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாகவும், தற்போது 30 இடங்களில் விரிவான ஆய்வு நடைபெற்று வருவதாகவும், 300 டன் தங்கம் கிடைக்க வாய்ப்பு உள்ளது என்றும் வியட்நாம் தெரிவித்துள்ளது.இப்படியான சூழலில் வியட்நாமில் 10 டன் தங்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு இருப்பது என்பது அந்த நாட்டுக்கு பெரும் ஜாக்பாட்டாக அமைந்துள்ளது. வரும் காலத்தில் வியட்நாமில் இன்னும் ஏராளமான தங்கம் கிடைக்கும் வாய்ப்புகள் உள்ளதால் அந்த நாட்டுக்கு அதிர்ஷ்டம் அடித்துள்ளது. மேலும் அந்த நாடு பொருளாதாரத்தில் வளரவும் பெரும் வாய்ப்பு என்பது உருவாகி உள்ளது.

 

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *